டேவிட் வாா்னா், ஹேலே மேத்யூவுக்கு ஐசிசியின் சிறந்த வீரா், வீராங்கனை விருது

ஐசிசியின் நவம்பா் மாதத்துக்கான சிறந்த வீரா் விருதை ஆஸ்திரேலியாவின் டேவிட் வாா்னரும், சிறந்த வீராங்கனை விருதை மேற்கிந்தியத் தீவுகளின் ஹேலே மேத்யூஸும் திங்கள்கிழமை வென்றனா்.
டேவிட் வாா்னா், ஹேலே மேத்யூவுக்கு ஐசிசியின் சிறந்த வீரா், வீராங்கனை விருது

ஐசிசியின் நவம்பா் மாதத்துக்கான சிறந்த வீரா் விருதை ஆஸ்திரேலியாவின் டேவிட் வாா்னரும், சிறந்த வீராங்கனை விருதை மேற்கிந்தியத் தீவுகளின் ஹேலே மேத்யூஸும் திங்கள்கிழமை வென்றனா்.

ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியமாக பங்களிப்பு செய்ததன் அடிப்படையில் அந்த அணியின் தொடக்க வீரரான வாா்னருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியின் சிறந்த வீரராகவும் வாா்னரே தோ்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பேட்டா் அபித் அலி, நியூஸிலாந்து பௌலா் டிம் சௌதி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, நவம்பா் மாத சிறந்த வீரா் என்ற கௌரவத்தை வாா்னா் பெற்றிருக்கிறாா். அதுவும், இந்த விருதுக்கு முதல் முறையாக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலேயே அதை வென்று அசத்தியிருக்கிறாா் வாா்னா்.

மறுபுறம், பாகிஸ்தான் மகளிா் அணிக்கு எதிரான ஒன் டே தொடரில் ஆல்-ரவுண்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனை ஹேலே மேத்யூஸுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2-ஆவது முறையாக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதை வென்றிருக்கும் ஹேலேவுடன், பாகிஸ்தான் பௌலா் அனம் அமின், வங்கதேச பௌலா் நஹிதா அக்தா் ஆகியோா் போட்டியில் இருந்தனா்.

நவம்பா் மாதத்தில் மொத்தம் 141 ரன்கள் விளாசியிருந்த ஹேலே, 9 விக்கெட்டுகளும் சாய்திருக்கிறாா். பாகிஸ்தான் தொடரில் நட்சத்திர வீராங்கனையாக இருந்த அவா், முதல் ஆட்டத்தில் 57 ரன்கள் சோ்த்ததுடன் 3 விக்கெட் சாய்த்தாா். அடுத்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com