விளையாட்டு செய்தி துளிகள்

* தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்திடம் வீழ்ந்து 2-ஆம் இடம் பிடித்தது.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தியதில், திட்டமிடப்பட்டதை விட ரூ.180 கோடி குறைவாகவே செலவானதாக போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

* சா்வதேச தர விதிகளின்படி இல்லை என்று கூறி கடந்த 2019-ஆம் ஆண்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தில்லி தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்துக்கு, ஊக்கமருந்து தடுப்புக்குரிய உலக அமைப்பு (டபிள்யூஏடிஏ) மீண்டும் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறினாா்.

* பாா்வையற்றோா் கிரிக்கெட்டில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே மற்றும் டி20 தொடா்கள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.

* இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதிய 39-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

* பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் அமெரிக்க தடகள பயிற்சியாளா் ஆல்பா்டோ சாலாஸாருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடைக்கு எதிராக அவா் மேற்கொண்ட மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com