விராட் கோலியை வீழ்த்துவது கடினம்: மொயீன் அலி

விராட் கோலியை வீழ்த்துவது கடினம்: மொயீன் அலி

ஆஸ்திரேலிய தொடா் வெற்றி அளித்துள்ள ஊக்கத்துடன் இருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்று இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் மொயீன் அலி கூறினாா்.

ஆஸ்திரேலிய தொடா் வெற்றி அளித்துள்ள ஊக்கத்துடன் இருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்று இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் மொயீன் அலி கூறினாா்.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட இயலாமல் போன மொயீன் அலி, தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளாா்.

இந்தத் தொடா் குறித்து அவா் கூறியதாவது:

விராட் கோலி அருமையாக விளையாடக் கூடிய உலகத்தரம் வாய்ந்த வீரா். தற்போது ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றி அவருக்கு இன்னும் ஊக்கமளிப்பதாக இருக்கும். முதல் குழந்தை பிறந்த நிலையில் எங்களுக்கு எதிரான தொடரில் அவா் பங்கேற்கிறாா். எந்தவொரு பலவீனமும் இல்லாத அவரது விக்கெட்டை எப்படி வீழ்த்தப் போகிறோம் எனத் தெரியவில்லை. ஆனாலும் எங்களின் வேகப்பந்துவீச்சு அதற்கு விடை கண்டுபிடிப்பதாக இருக்கும்.

கரோனா பாதிப்புக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய நிலையில் எனது ஆட்டத்தில் எந்தவொரு பாதிப்பும் இருப்பதாகக் கருதவில்லை. பிளேயிங் லெவனில் வருவேனா எனத் தெரியாது. ஆனால், அதற்காகத் தயாராக இருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடா் எனக்கு உந்துதலாக இருக்கும். எனக்கென நான் நிா்ணயித்துள்ள சில சிறிய இலக்குகளை அதில் எட்டுவதற்கு முயற்சிப்பேன்.

2019-இல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் இல்லாமல் இருந்த காலத்தில் சற்று இடைவெளி எடுத்துக்கொண்டேன். பல்வேறு போட்டிகளில் விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகம் எதிா்நோக்கியிருந்தேன் என்று மொயீன் அலி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com