விவசாயிகள் போராட்டம்: மருத்துவச் செலவுக்கு ரூ. 7 லட்சம் அளித்துள்ள அமெரிக்க விளையாட்டு வீரர்

விவசாயிகள் போராட்டம் குறித்த ஒரு செய்தியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பரப்பியுள்ளார். 
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக ரூ. 7.28 லட்சம் நிதியுதவி செய்துள்ளார் அமெரிக்க விளையாட்டு வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஸ்வீடனைச் சோ்ந்த சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பா்க், பாடகியும் நடிகையுமான ரியானா உள்ளிட்ட பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். விவசாயிகள் போராட்டம் பற்றிய ஒரு செய்தியைப் பகிர்ந்து, இதைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார் ரியானா. இதைத் தொடர்ந்து, கிரிக்கெட் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் பாடகி ரியானாவின் கருத்துக்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். 

இந்நிலையில் தில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக ரூ. 7.28 லட்சம் நிதியுதவி செய்துள்ளதாக தேசிய கால்பந்து லீக் (என்எஃப்எல்) வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர், ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

இச்சமயத்தில் உயிர்களைக் காப்பதற்காக, இந்தியாவில் உள்ள விவசாயிகளின் மருத்துச் செலவுக்கு ரூ. 7.28 லட்சம் (10,000 டாலர்) அளித்துள்ளேன். இதன்மூலம் எந்தவொரு உயிர் இழப்பையும் நாம் தடுக்க முடியும் என எண்ணுகிறேன் என்று கூறி விவசாயிகள் போராட்டம் குறித்த ஒரு செய்தியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பரப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com