ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக சஞ்சய் பங்கர் நியமனம்!

சஞ்சய் பங்கர், இந்திய அணிக்காக 12 டெஸ்டுகள் மற்றும் 15 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக சஞ்சய் பங்கர் நியமனம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ஐபிஎல் அணியின் பேட்டிங் ஆலோசகராக சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் பத்து ஆட்டங்கள் வரை சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி, அடுத்த ஐந்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததால் போட்டியிலிருந்து வெளியேறியது. 10 ஆட்டங்களின் முடிவில் 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்திருந்த ஆர்சிபி அணி, 14 ஆட்டங்களின் முடிவிலும் 14 புள்ளிகளே பெற்றது. எனினும் ஆரம்பத்தில் பெற்ற வெற்றிகளால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. ஆனால் இந்த முறையும் ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணியால் வெல்ல முடியவில்லை. கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வரும் ஆர்சிபி அணி, இந்தமுறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றிருப்பதே நல்ல முன்னேற்றம் தான் என்கிற ஆறுதலை அதன் ரசிகர்கள் பெற்றார்கள். 

2016-ல் லீக் சுற்றின் முடிவில் 2-ம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் பெற்றுள்ளது. மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

இந்நிலையில் 2014 முதல் 2019 வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றிய சஞ்சய் பங்கர், ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அணி இயக்குநர் மைக் ஹெஸன், தலைமைப் பயிற்சியாளர் சைமன் கடிச், பேட்டிங் மற்றும் சுழற்பந்துப் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆடம் கிரிஃப்ஃபித், உடற்தகுதிப் பயிற்சியாளர் சங்கர் பாசு ஆகியோருடன் இணைந்து சஞ்சய் பங்கர் பணியாற்றவுள்ளார். 

சஞ்சய் பங்கர், இந்திய அணிக்காக 12 டெஸ்டுகள் மற்றும் 15 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com