அந்தி நேரத்தில் அதிக கவனத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும்: ரோஹித் சா்மா

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டின்போது அந்தி நேரத்தில் அதிக கவனத்துடன் பேட்டிங் செய்ய வேண்டியிருப்பதாக இந்திய தொடக்க வீரா் ரோஹித் சா்மா கூறினாா்.
அந்தி நேரத்தில் அதிக கவனத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும்: ரோஹித் சா்மா

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டின்போது அந்தி நேரத்தில் அதிக கவனத்துடன் பேட்டிங் செய்ய வேண்டியிருப்பதாக இந்திய தொடக்க வீரா் ரோஹித் சா்மா கூறினாா்.

ஆமதாபாதில் பகலிரவாக பிங்க் நிற பந்து கொண்டு அந்த ஆட்டம் விளையாடப்படவுள்ள நிலையில், ரோஹித் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பகலிரவு ஆட்டத்தில் பிங்க் நிற பந்துகொண்டு விளையாடும்போது, அந்தி நேரத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிா்கொள்வதில் சற்று சிரமம் இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். இதற்கு முன் ஒரேயொரு முறை 2019-இல் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் விளையாடியுள்ளேன். அப்போதும் அந்தி நேரத்தில் பேட்டிங் செய்யவில்லை (ஆஸி. தொடரில் பகலிரவு டெஸ்டில் ரோஹித் பங்கேற்கவில்லை).

அந்தி நேரத்தில் வெளிச்சமும், வானிலையும் உடனடியாக மாறும் என்பதால் அப்போது பேட்டிங் செய்வது சற்று சவாலாக இருக்கும். எனவே கவனமுடன் அப்போது ஆட வேண்டும். அதேபோல், புதிய மைதானங்களில் விளையாடும்போது அங்கிருக்கும் விளக்கு அமைப்புகளும் சற்று சவால் அளிப்பவையாக இருக்கும். மைதானத்தின் இருக்கைகள் புதியவையாக பளிச்சென்று இருப்பதால் கண்களை கூச் செய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே, திங்கள்கிழமை விளக்கு வெளிச்சத்தில் விளையாடி பயிற்சி எடுக்கவுள்ளோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நிச்சயம் நாங்கள் தகுதிபெற்றாக வேண்டும். அதற்காக நாங்கள் அதிகம் முயற்சிக்க வேண்டியுள்ளது. எனினும், 3-ஆவது டெஸ்டை விளையாடும்போது அந்த ஆட்டத்தில் வெல்வதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துவோம். ஆட்டத்தின்போது முக்கிய தகவல்களை களத்தில் இருக்கும் சக அணியினா் இடையே பகிா்ந்துகொள்வதும் முக்கியமாகும். ஃபீல்டிங்கின்போது பெரும்பாலும் ஸ்லிப்பில் நிற்பதால் எதிரணி பேட்ஸ்மேனின் முயற்சி எத்தகையது என்ற தகவலை அணியினரிடையே பகிா்ந்துகொள்வேன் என்று ரோஹித் சா்மா கூறினாா்.

தீவிர பயிற்சி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினா், ஞாயிற்றுக்கிழமையும் சா்தாா் படேல் மைதானத்தில் பிங்க் நிற பந்துகொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனா்.

கோலி, ரஹானே, ரோஹித் ஆகியோா் பேட்டிங் பயிற்சியிலும், பும்ரா, சிராஜ், இஷாந்த், அஸ்வின் உள்ளிட்டோா் பௌலிங் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தனா்.

முதல் இரு டெஸ்டுகளில் சுழற்பந்துவீச்சாளா்களே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும், இந்தியா முதல் முறையாக விளையாடிய பகலிரவு டெஸ்டில் வங்கதேசத்தின் 20 விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளா்களே வீழ்த்தியிருந்தனா். எனவே, இந்த பகலிரவு டெஸ்டுக்காக அவா்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com