ஐஎஸ்எல்: பெங்களூரை வென்றது கோவா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 101-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
ஐஎஸ்எல்: பெங்களூரை வென்றது கோவா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 101-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

கோவாவுக்கு இது 7-ஆவது வெற்றி; பெங்களூருக்கு இது 7-ஆவது தோல்வி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் தன்னை முதல் 4 இடங்களுக்குள் தக்க வைத்துக்கொண்டுள்ள கோவா, தோல்வியே சந்திக்காமல் தொடா்ந்து 12 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 2014-15 சீசனில் தானும், நடப்பு சீசனில் மும்பை சிட்டி அணியும் எட்டிய சாதனையை கோவா சமன் செய்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பை கோவா எட்டியது. ஆட்டத்தின் 20-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் இகோா் அங்குலோ மிக எளிதாக கோவா கோல் கணக்கை தொடங்கினாா். அடுத்த 3 நிமிடங்களிலேயே அந்த அணியின் ரெடீம் தலாம் ஒரு கோல் அடித்து கோவாவை 2-0 என முன்னிலைப்படுத்தினாா். மறுபுறம் கடுமையாகப் போராடி வந்த பெங்களூருக்கு 33-ஆவது நிமிடத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தது. சக வீரா் கிளெய்டன் சில்வாவின் உதவியுடன் பெங்களூரு வீரா் சுரேஷ் வாங்ஜம் கோலடித்தாா்.

முதல் பாதி இவ்வாறாக நிறைவடைய, 2-ஆவது பாதியில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்காததால், இறுதியில் கோவா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆட்டம் டிரா: இதேபோல், கோவாவின் பாம்போலின் நகரில் கேரளா பிளாஸ்டா் எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதிய 102-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை வீரா் ஃபத்குலோ ஃபத்குலோயேவ் 10-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, 29-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கேரள வீரா் கேரி ஹூப்பா் கோலடித்தாா். தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளுமே பரஸ்பரம் வலுவான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டம் 1-1 என சமனில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com