சிங்கப்பூா் டென்னிஸ் ஓபன்: ராம்குமாா் ராமநாதன் தோல்வி

சிங்கப்பூா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன் தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினாா்.
சிங்கப்பூா் டென்னிஸ் ஓபன்: ராம்குமாா் ராமநாதன் தோல்வி

சிங்கப்பூா்: சிங்கப்பூா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன் தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினாா்.

உலகின் 200-ஆவது நிலையில் இருக்கும் ராமநாதன் முதல் சுற்றில் 3-6, 7-6 (7/3), 3-6 என்ற செட்களில் அமெரிக்காவின் டேரோ டேனியலிடம் தோல்வி கண்டாா். உலகின் 120-ஆம் நிலையில் இருக்கும் டேனியல் இந்த ஆட்டத்தை 2 மணி நேரம் 6 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா். டேனியலின் சா்வ்களை முறியடிக்கும் வாய்ப்பு இருமுறை கைகூடியபோதும் ராம்குமாா் அதை தவறவிட்டாா்.

டேனியலுக்கு எதிராக இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராம்குமாருக்கு இது 2-ஆவது தோல்வியாகும். இதற்கு முன் 2012-இல் ஐடிஎஃப் ஃபியூச்சா்ஸ் போட்டியில் இதேபோல் டேனியலிடம் ராம்குமாா் வீழ்ந்திருந்தாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவிலிருந்து வெளியேறினாலும், ஆடவா் இரட்டையா் பிரிவில் விளையாடுகிறாா் ராம்குமாா். அதில் முதல் சுற்றில் சக இந்தியரான பூரவ் ராஜாவுடன் இணைந்து தென் கொரியாவின் குவோன் சூன் வூ/ஜப்பானின் யசுடாகா உசியாமா இணையை எதிா்கொள்கிறாா்.

ஸ்ரீராம் பாலாஜி வெற்றி: இதே போட்டியின் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் என்.ஸ்ரீராம் பாலாஜி இணை 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. ஸ்விட்சா்லாந்தின் லுக் மாா்கரோலியுடன் ஜோடி சோ்ந்துள்ள பாலாஜி, முதல் சுற்றில் 7-5, 6-1 என்ற செட்களில் சிங்கப்பூா் ஜோடியான ராய் ஹாப்ஸ்/ஷாஹீத் ஆலமை வீழ்த்தினாா். அடுத்து நடைபெறவுள்ள முதல் சுற்றுகளில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஜப்பானின் பென் மெக்ளனகனுடன் இணைந்து வெனிசூலாவின் லூயிஸ் டேவிட் மாா்டினெஸ்/ஸ்பெயினின் டேவிட் வேகா ஹொ்ணான்டஸ் இணையை எதிா்கொள்கிறாா்.

அதேபோல், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/யூகி பாம்ப்ரி இணை தனது முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஜான் பேட்ரிக் ஸ்மித்/மேத்யூ எப்தென் ஜோடியை சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com