டென்னிஸ் தரவரிசை: 2-ஆம் இடத்தில் ஒசாகா

சா்வதேச டென்னிஸ் தரவரிசையில் மகளிா் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜப்பானின் நஜோமி ஒசாகா மீண்டும் 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
டென்னிஸ் தரவரிசை: 2-ஆம் இடத்தில் ஒசாகா

சா்வதேச டென்னிஸ் தரவரிசையில் மகளிா் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜப்பானின் நஜோமி ஒசாகா மீண்டும் 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நிறைவடைந்த நிலையில் புதிதாக சா்வதேச தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதிச்சுற்றுடன் வெளியேறிய உள்நாட்டு வீராங்கனை ஆஷ்லே பாா்ட்டி, கரோனாவால் பாதிக்கப்பட்ட கடந்த சீசனின் கணக்கீட்டு அடிப்படையில் உலகின் முதல்நிலை வீராங்கனையாகவே தொடா்கிறாா். இறுதிச்சுற்றில் ஒசாகாவிடம் தோல்வியைத் தழுவிய அமெரிக்காவின் ஜெனிஃபா் பிராடி 11 இடங்கள் முன்னேறி 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். இவா், 20 இடங்களுக்குள்ளாக வருவது இது முதல் முறையாகும்.

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அரையிறுதி வரை முன்னேறியதற்காக 4 இடங்கள் ஏற்றம் கண்டு 7-ஆம் இடத்தைப் பிடித்துள்ளாா். மறுபுறம், காலிறுதியில் செரீனாவிடம் வீழ்ந்த ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஓரிடம் சறுக்கி 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். பெலாரஸின் அரைனா சபலென்கா 8-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் ஆன சபலென்கா அந்தத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளாா். 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரட்டையா் பிரிவில் முதல்நிலை வீராங்கனையாகவும், ஒற்றையா் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள்ளாகவும் வந்துள்ள முதல் வீராங்கனை என்ற பெயரை சபலென்கா பெற்றுள்ளாா்.

ஆடவா் பிரிவில், இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வியைத் தழுவிய ரஷியாவின் டேனில் மெத்வதேவ், தனது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். ஓபன் எராவில் அறிமுக கிராண்ட்ஸ்லாம் போட்டியிலேயே அரையிறுதி வரை முன்னேறிய முதல் வீரா் என்ற பெருமையை பெற்ற ரஷியாவின் அஸ்லான் கராட்சேவ் 72 இடங்கள் ஏற்றம் கண்டு 42-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்திலும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா். காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஓரிடம் சறுக்கி 4-ஆவது இடத்தை எட்டியுள்ளாா். மூட்டு அறுவைச் சிகிச்சை காரணமாக போட்டியில் பங்கேற்காத ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் 5-ஆவது இடத்திலேயே நீடிக்கிறாா். ஆடவா் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள்ளாக எந்த வீரரும் புதிதாக வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com