ஐபிஎல் போட்டியை 5 இடங்களில் நடத்த பிசிசிஐ பரிசீலனை
By DIN | Published On : 27th February 2021 07:41 AM | Last Updated : 27th February 2021 07:41 AM | அ+அ அ- |

2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை 4 அல்லது 5 மைதானங்களில் நடத்த பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறது.
2022 சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் இருப்பதால், மும்பையில் உள்ள வான்கடே, பா்போா்ன், டி.ஓய்.பாட்டீல், ரிலையன்ஸ் ஆகிய 4 மைதானங்களில் ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வந்தது.
ஆனால், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்தும் முடிவை பிசிசிஐ கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்குப் பதிலாக ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஆமதாபாத் உள்ளிட்ட மைதானங்களில் போட்டியை நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சீசன் ஐபிஎல் போட்டிகள், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.