Enable Javscript for better performance
Five Indian players isolating as CA, BCCI launch investigation- Dinamani

சுடச்சுட

    

    விதிமுறைகளை மீறியதாகப் புகார்: ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் உள்பட ஐந்து வீரர்களையும் தனிமைப்படுத்த உத்தரவு

    By DIN  |   Published on : 02nd January 2021 05:04 PM  |   அ+அ அ-   |    |  

    PTIJUL015_16-08-2019_20_6_36xx

     

    கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட ஐந்து இந்திய வீரர்களும் தனிமைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

    ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

    புத்தாண்டை முன்னிட்டு மெல்போர்னில் உள்ள உணவு விடுதிக்கு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், சைனி போன்றோர் சென்றார்கள். 

    இந்நிலையில் அதே சமயத்தில் அங்கிருந்த நவால்தீப் சிங் என்கிற இந்திய கிரிக்கெட் ரசிகர், இந்திய வீரர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய உணவு பில்லுக்கான கட்டணத்தைத் தானே செலுத்தியுள்ளார். இதையடுத்து உணவகத்தில் என்ன நடந்தது என்பதை அவர் ட்விட்டரில் விலாவாரியாகத் தெரிவித்தது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    ட்விட்டரில் நவால்தீப் சிங் தெரிவித்ததாவது:

    நான் பில் தொகையைக் கட்டியது இந்திய வீரர்களுக்குத் தெரியாது. என்னுடைய சூப்பர் ஸ்டார்களுக்கான சிறிய பங்களிப்பு. நான் தான் பில்லைக் கட்டினேன் எனத் தெரிந்தவுடன், அண்ணா காசு வாங்கிக்கோங்க, இல்லைனா நல்லா இருக்காது என என்னிடம் ரோஹித் சர்மா சொன்னார். என்னை அணைத்து நன்றி சொன்னார் ரிஷப் பந்த் என்றார். 

    அவர் கட்டிய பில்லின் தொகை - ரூ. 6683. கிரிக்கெட் ரசிகருடைய இந்த ட்வீட்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. கரோனா தடுப்பு விதிமுறைகளை இந்திய வீரர்கள் மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விதிமுறைப்படி, விடுதியின் வெளிப்பகுதியில் மட்டுமே வீரர்கள் சாப்பிட வேண்டும். ஆனால் நவால்தீப் சிங் வெளியிட்ட விடியோவில், இந்திய வீரர்கள் விடுதியின் உள்ளே இருப்பது போலத் தெரிகிறது. மேலும் யாரும் முகக்கவசம் அணியவில்லை. 

    இந்நிலையில் இந்த விவகாரம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட ஐந்து இந்திய வீரர்களும் தனிமைப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து பேரும் விடுதிக்குச் சாப்பிட சென்றது கரோனா விதிமுறைகளை மீறியதா என்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் பிசிசிஐயும் விசாரணை செய்து வருகின்றன.

    அதுவரை, இந்திய, ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவின் அறிவுரையின்படி, ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஐவரும் இந்திய வீரர்களுடன் இணைந்து பயணம் செய்வதோ பயிற்சி மேற்கொள்ளவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐந்து வீரர்களும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்றாகப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள்.

    TAGS
    BCCI CA

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp