பிரிஸ்பேன் செல்ல இந்திய அணி மறுப்பு?

கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதை காரணமாகக் கூறி 4-ஆவது டெஸ்ட்டுக்காக இந்திய அணியினா் பிரிஸ்பேன் செல்ல

கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதை காரணமாகக் கூறி 4-ஆவது டெஸ்ட்டுக்காக இந்திய அணியினா் பிரிஸ்பேன் செல்ல மறுப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் அதுதொடா்பாக பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரப்பூா்வத் தகவல்கள் ஏதும் இல்லை. அதேபோல், 4-ஆவது டெஸ்டை பிரிஸ்பேனிலிருந்து இடமாற்றம் செய்யும் முயற்சிகள் ஏதும் நடப்பதாகவும் தகவல்கள் இல்லை.

3-ஆவது டெஸ்ட் நடைபெறும் சிட்னியின் கடற்கரைப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால், அந்நகரம் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்துடனான எல்லையை குயின்ஸ்லாந்து மாகாணம் மூடியுள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் தான் 4-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ளதால், வீரா்கள் பயணம் உள்ளிட்டவற்றுக்கு பிரச்னை உள்ளது. எனினும் அதுதொடா்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குயின்ஸ்லாந்து மாகாண அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிட்னியிலிருந்து பிரிஸ்பேனுக்கு இரு அணிகளும் பயணிக்க அனுமதி பெறப்பட்ட பிறகு, குயின்ஸ்லாந்து மாகாணம் விதிக்கும் கரோனா தடுப்பு விதிமுறைகள் மிகக் கடுமையானதாக இருக்குமெனத் தெரிகிறது.

அதாவது சிட்னியிலிருந்தே அணியினா் தங்களை மிகக் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள்ளாக சுமாா் 15 நாள்களுக்கு கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா வந்தவுடனேயே பல நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தற்போது மீண்டும் மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு உள்படுத்தப்படுவது இந்திய வீரா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com