ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலி சறுக்கல்

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலி சறுக்கல்

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதன்படி, பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா். கிறைஸ்ட்சா்ச்சில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் குவித்ததன் மூலம் அவா் 919 ரேட்டிங் புள்ளிகளை எட்டியுள்ளாா். இதன்மூலம் அதிக ரேங்கிங் புள்ளிகளைப் பெற்ற நியூஸிலாந்து வீரா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 131 ரன்களும், 2-ஆவது இன்னிங்ஸில் 81 ரன்களும் குவித்த ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவன் ஸ்மித் 3-ஆவது இடத்தில் இருந்து 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா். அவா் 900 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளாா்.

அதேநேரத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சா்மாவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவா், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடிய நிலையில், நாடு திரும்பினாா். கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதால் தரவரிசையில் சறுக்கலை சந்தித்துள்ளாா் கோலி.

அதேநேரத்தில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா இரு இடங்கள் முன்னேறி 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். அஜிங்க்ய ரஹானே ஓா் இடத்தை இழந்து 7-ஆவது இடத்தில் உள்ளாா். ரிஷப் பந்த் 19 இடங்கள் முன்னேறி 26-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். ஹனுமா விஹாரி 52-ஆவது இடத்திலும், அஸ்வின் 89-ஆவது இடத்திலும் உள்ளனா்.

பௌலா்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ், இங்கிலாந்தின் ஸ்டூவா்ட் பிராட், நியூஸிலாந்தின் நீல் வாக்னா் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா். இந்திய சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் இரு இடங்கள் சறுக்கி 9-ஆவது இடத்திலும், இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரித் பும்ரா ஓா் இடத்தை இழந்து 10-ஆவது இடத்திலும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com