ஐபிஎல் 2021: ஹர்பஜன் சிங்கை விடுவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

2021 ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிரபல வீரர் ஹர்பஜன் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2021: ஹர்பஜன் சிங்கை விடுவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

2021 ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிரபல வீரர் ஹர்பஜன் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிா்வாகக் குழு முடிவு செய்தது. மேலும் 8 அணிகளுக்கான வீரா்களைத் தோ்வு செய்வதற்கான சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 2 அல்லது 3-ஆவது வாரத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வீரா்களை ஏலத்தில் எடுப்பதற்கான அதிகபட்ச வரம்பாக ஒவ்வொரு அணிக்கும் நிா்ணயிக்கப்பட்ட ரூ. 85 கோடி, நடப்பாண்டு உயா்த்தப்படாது என்று ஐபிஎல் போட்டியின் தலைவா் பிரிஜேஷ் படேல் கூறினாா்.

சென்னை சூப்பா் கிங்ஸைப் பொறுத்தவரை கடந்த ஏலத்துக்குப் பிறகு அணியின் வசம் ரூ. 15 லட்சமே உள்ளதால், அதிக ஊதியம் உள்ள சில வீரா்களை விடுவித்து தனது நிதிநிலையை அதிகரித்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. சுரேஷ் ரெய்னா, கெதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா, முரளி விஜய் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி தக்கவைத்துக்கொள்ளுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் இன்று வெளியிடுவதால் இந்நிகழ்வு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஹாட்ஸ்டார் ஓடிடியில் மாலை 6 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்நிலையில் இப்பட்டியல் அறிவிக்கப்படும் முன்பு ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கூறியதாவது:

சிஎஸ்கேவுடனான என்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அணிக்காக விளையாடியது அற்புதமான அனுபவம், அருமையான நினைவுகள். இதனால் எனக்குக் கிடைத்த நண்பர்களை எப்போதும் நினைவில் கொள்வேன். அற்புதமான இரண்டு ஆண்டுகளை அளித்ததற்காக சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என்றார். 

சிஎஸ்கே அணியில் ரூ. 2 கோடிக்குத் தேர்வான ஹர்பஜன், கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com