முன்னெச்சரிக்கையாக இருந்தும் கரோனா வந்துவிட்டது: அனுபவத்தைப் பகிர்ந்த சானியா மிர்சா

இந்தக் கிருமி விளையாட்டல்ல. எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும்...
முன்னெச்சரிக்கையாக இருந்தும் கரோனா வந்துவிட்டது: அனுபவத்தைப் பகிர்ந்த சானியா மிர்சா

கரோனா வைரஸால் தான் பாதிக்கப்பட்டது குறித்து சமூகவலைத்தளங்களில் பதிவு எழுதியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சானியா மிர்சா, கரோனாவால் பாதிக்கப்பட்ட அனுபவம் குறித்து ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

கரோனா வைரஸால் நான் பாதிக்கப்பட்டேன். கடவுளின் அருளால் தற்போது நலமாக உள்ளேன். என்னுடைய அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன்.

(கரோனாவால் பாதிக்கப்பட்டபோது) நல்லவேளையாக எனக்குப் பெரிய அறிகுறிகள் இல்லை. நான் தனிமைப்படுத்திக்கொண்டபோது என் 2 வயது குழந்தை மற்றும் குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதுதான் கடினமாக இருந்தது. மருத்துவமனையில் உடல்நலக் குறைவுடன் தனியாகக் கஷ்டப்படும் மக்கள், வேதனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இது மிகவும் அச்சமூட்டக்கூடியது. என்ன நடக்கும் எனத் தெரியாது. பலவிதமான அனுபவங்கள், கதைகளைக் கேட்க வேண்டியிருக்கும். தினமும் ஒரு அறிகுறி தோன்றும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்வது கடினமாக உள்ளது. இதை அனுபவித்துவிட்டுச் சொல்கிறேன், எனக்கு ஓரளவு சரியானது அதிர்ஷ்டத்துக்குரியது. மீண்டும் எப்போதும் பார்ப்பேன் எனத் தெரியாமல் குடும்பத்தை விட்டுத் தனியாக இருந்தது அச்சத்தை அளித்தது. 

இந்தக் கிருமி விளையாட்டல்ல. எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் கரோனாவால் நான் பாதிக்கப்பட்டேன். நம் நண்பர்களையும் குடும்பத்தையும் பாதுகாக்க எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். உங்கள் முகக்கவசத்தை அணியுங்கள், கைகளைக் கழுவுங்கள், உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கரோனாவுக்கு எதிரான போரில் ஒற்றுமையுடன் இருப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com