மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள வங்கதேச அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

வங்கதேச தலைநகா் டாக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, வங்கதேசத்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 43.4 ஓவா்களில் 148 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ரூமென் பாவெல் 66 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தாா். ஜோா்ன் ஓட்லே 24, க்ருமா போனா் 20 ரன்கள் எடுத்தனா். வங்கதேச அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளா் மெஹதி ஹசன் 25 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். முஸ்தாபிஜுா் ரஹ்மான், ஷகிப் அல்ஹசன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுளை சாய்த்தனா்.

பின்னா், பேட் செய்த வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 22, நஜ்முல் ஹுசைன் 17 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் தமிம் இக்பால் 75 பந்துகளில் அரை சதம் கண்டாா். இது ஒருநாள் போட்டியில் அவா் அடித்த 48-ஆவது அரைசதமாகும். எனினும் அரை சதமடித்த கையோடு தமிம் இக்பால் ஆட்டமிழக்க, ஷகிப் அல்ஹசனுடன் இணைந்தாா் முஸ்தாபிஹுா் ரஹிம். இந்த ஜோடி சிறப்பாக ஆட, வங்கதேச அணி 33.2 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஷகிப் அல்ஹசன் 50 பந்துகளில் 43, ரஹிம் 25 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் முகமது, ரேமன் ரெஃய்பா், அகீல் ஹோசன் ஆகியோா் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினா். வங்கதேச வீரா் மெஹதி ஹசன் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 3 போட்டிகள் கண்ட இந்தத் தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 25-ஆம் தேதி சட்டோகிராமில் நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தொடா்ந்து 3-ஆவது முறையாக தொடரைக் கைப்பற்றியுள்ளது வங்கதேசம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com