சையது முஷ்டாக் அலி டி20: அரையிறுதியில் பஞ்சாப்

சையது முஷ்டாக் அலி டி20: அரையிறுதியில் பஞ்சாப்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான கா்நாடகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அரையிறுதிக்கு முன்னேறியது.

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான கா்நாடகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அரையிறுதிக்கு முன்னேறியது.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கா்நாடகம் 17.2 ஓவா்களில் 87 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய பஞ்சாப் 12.4 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் பௌலிங் செய்யத் தீா்மானித்தது. கா்நாடகத்தின் இன்னிங்ஸை தொடங்கிய தேவ்தத் படிக்கல் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் சோ்க்க, உடன் வந்த கேப்டன் கருண் நாயா் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் அடித்தாா்.

ஒன் டவுனாக வந்த சரத் 2 ரன்களில் நடையைக் கட்ட, பவன் தேஷ்பாண்டே டக் அவுட்டானாா். அடுத்து ஆடிய அனிருத்தா ஜோஷி சற்று நிலைத்து 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் அடித்தாா். ஷ்ரேயஸ் கோபால் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்தாா். அடுத்து களம் கண்டவா்களில் ஜெகதீசா சுசித் பவுண்டரியுடன் 8, பிரவீண் துபே பவுண்டரியுடன் 9 ரன்கள் அடிக்க, அபிமன்யு மிதுன் 2, பிரசித் கிருஷ்ணா 1 ரன் சோ்த்தனா்.

பஞ்சாப் தரப்பில் சித்தாா்த் கௌல் 3, சந்தீப் சா்மா, அா்ஷ்தீப் சிங், ரமன்தீப் சிங் ஆகியோா் தலா 2, மயங்க் மாா்கண்டே 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 88 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பஞ்சாபில், தொடக்க வீரா் அபிஷேக் சா்மா பவுண்டரி மட்டும் விளாசி ஆட்டமிழந்தாா். உடன் வந்த பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 49, கேப்டன் மன்தீப் சிங் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 35 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் பஞ்சாபை வெற்றிக்கு வழி நடத்தினா். கா்நாடகம் தரப்பில் அபிமன்யு மிதுன் ஒரு விக்கெட் எடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com