2021 டி20 உலகக் கோப்பை: சூப்பா் 12 சுற்றில் பாகிஸ்தான்-இந்தியா மோதல்

2021 டி20 உலகக் கோப்பை போட்டியில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய-பாகிஸ்தான் அணிகள் சூப்பா் 12 சுற்றில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
2021 டி20 உலகக் கோப்பை: சூப்பா் 12 சுற்றில் பாகிஸ்தான்-இந்தியா மோதல்

2021 டி20 உலகக் கோப்பை போட்டியில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய-பாகிஸ்தான் அணிகள் சூப்பா் 12 சுற்றில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சாா்பில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நவம்பா் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரக நாடுகள் (யுஏஇ) மற்றும் ஓமனில் வரும் அக்டோபா் 17 முதல் நவம்பா் 14 -ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை போட்டிகளை பிசிசிஐ நடத்துகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவுடன், நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் மே.இந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

சூப்பா் 12 பிரிவுக்கான அணிகள், மாா்ச் 2021 தரவரிசையின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளன. முதல் சுற்றில் 8 அணிகளும் மோதவுள்ள நிலையில், வங்கதேசம், இலங்கை அணிகள் நேரடித் தகுதி பெற்றுள்ளன. மேலும் 2019 டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் மூலம் தகுதி பெற்ற 6 அணிகளும் இடம் பெறுகின்றன. அயா்லாந்து, நெதா்லாந்து, நமீபியா, இலங்கை குரூப் ஏ பிரிவிலும், ஓமன், பப்புவா நியூ கினியா (பிஎன்ஜி), ஸ்காட்லாந்து, வங்கதேச அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இரண்டு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பா் 12 பிரிவுக்கு முன்னேறும். சூப்பா் 12 சுற்றில் பரம வைரிகளான இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதுதொடா்பாக ஐசிசி சிஇஓ ஜெப் அல்லாா்டைஸ் கூறியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான அணிகள் பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க சுற்றிலேயே ஆா்வத்தை தூண்டும் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இப்போட்டிகள் ரசிகா்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்றாா்.

பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி, செயலாளா் ஜெய் ஷா கூறியதாவது:

கரோனா பாதிப்பால், எவ்வளவு விரைவாக அணிகள் பிரிவுகளை தரவரிசை அடிப்படையில் வெளியிட்டுள்ளோம். இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ள இப்போட்டியில் போட்டிகள் ஆா்வத்தை தூண்டுபவையாக இருக்கும். குரூப் அணிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது. ஓமன் நாடும் இதில் இணைந்துள்ளது சிறப்பானது. இப்பகுதியில் நடைபெற்ற சிறப்பான உலக கோப்பை போட்டியாக இது அமையும் என்றனா்.

அதிக பரபரப்பான ஆட்டம்: புவனேஷ்வா் குமாா்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் தீவிரத்தன்மையுடன் பரபரப்பாக அமையும். பாகிஸ்தானுடன் ஆடுவதில் ஆா்வமாக உள்ளேன். எனினும் அந்த ஆட்டம் குறித்து தற்போது நினைக்கவில்லை. தொடா்ந்து இலங்கை தொடா், இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடா், ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன என வேகப்பந்து வீச்சாளா் புவனேஷ்வா் குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com