பயிற்சி ஆட்டத்தில் ஆவேஷ் கானுக்குக் காயம்!

​இந்தியா, கவுன்டி செலக்ட் XI அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. 
படம்: பிசிசிஐ | ட்விட்டர்
படம்: பிசிசிஐ | ட்விட்டர்


இந்தியா, கவுன்டி செலக்ட் XI அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கு முன்னதாக டர்ஹமில் கவுன்டி செலக்ட் XI அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் கவுன்டி செலக்ட் XI அணிக்காக விளையாடுகின்றனர்.

இதில் முதல் நாள் ஆட்டத்தின்போது இடதுகை கட்டை விரலில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி பிசிசிஐ புதன்கிழமை தெரிவித்தது:

"வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணிப்பில் இருப்பார். பயிற்சி ஆட்டத்தின் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார்."

ஏற்கெனவே காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. எனினும், 2-வது நாள் ஆட்ட உணவு இடைவேளையின்போது கோலி பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com