டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,500 ரன்கள்: கோலி புதிய மைல்கல்
By DIN | Published On : 19th June 2021 09:18 PM | Last Updated : 19th June 2021 09:18 PM | அ+அ அ- |

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 7,500 ரன்கள் என்ற மைல்கல்லை சனிக்கிழமை எட்டினார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதில் பேட்டிங் செய்து வரும் விராட் கோலி 7,500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். கோலியும், கவாஸ்கரும் இதனை 154-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 144-வது இன்னிங்ஸில் இதனை அடைந்துள்ளார்.
சர்வதேச அளவில் 7,500 ரன்கள் என்ற மைல்கல்லை துரிதமாக எட்டிய வீரர்கள் வரிசையில் கோலி 9-வது இடம். துரிதமாக எட்டிய இந்திய வீரர்களில் கோலி 4-வது இடம்.