விளையாட்டு செய்தி துளிகள்

* ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/திவிஜ் சரண் இணை 3-6, 6-7 (3/7) என்ற செட்களில் பெல்ஜியத்தின் சான்டா் கிலே/ஜோரான் விலெகென் ஜோடியிடம் வீழ்ந்தது.

* ருமேனிய பளுதூக்குதல் வீரா்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் அந்நாட்டு வீரா்கள் பங்கேற்க சா்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தடை விதித்துள்ளது.

* குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி முா்ரே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 3-6, 3-6 என்ற செட்களில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டியினியிடம் தோல்வி கண்டாா்.

* ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடாலைத் தொடா்ந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.

* தேசிய விளையாட்டு விருதுகளுக்காக விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மத்திய அரசு வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

* ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக 8 போ் கொண்ட இந்திய குத்துச்சண்டை குழுவினா் பயிற்சி பெறுவதற்காக இத்தாலி செல்கின்றனா்.

* சமூக வலைதளமான ‘இன்ஸ்டாகிராம்’-இல் 30 கோடி ஃபாலோயா்களைக் கொண்ட முதல் நபராகி போா்ச்சுகல் கால்பந்து வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com