2013-க்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத இந்திய அணி

2013 -ல் சாம்பியன்ஸ் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.
2013-க்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 

டெஸ்ட் கிரிக்கெட்டின் 144 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து.

139 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கேன் வில்லியம்சன்-ராஸ் டெய்லர் கூட்டணி நியூசிலாந்தை வழிநடத்தியது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 7 விக்கெட்டுகள் சாய்த்த கைல் ஜேமிசன் ஆட்டநாயகன் ஆனார். 

இதனால் 2013-க்குப் பிறகு இந்திய அணியால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத நிலை இன்றுவரை தொடர்கிறது.

ஐசிசி கோப்பைப் போட்டியில் இந்தியா

2013 - சாம்பியன்ஸ் கோப்பை - இந்தியா சாம்பியன்.

2014 - டி 20 உலகக் கோப்பை - இறுதிச்சுற்றில் இந்தியா தோல்வி.

2015 - ஒரு நாள் உலகக் கோப்பை  - அரையிறுதியில் இந்தியா தோல்வி.

2016 டி 20 உலகக் கோப்பை - அரையிறுதியில் இந்தியா தோல்வி.

2017 - சாம்பியன்ஸ் கோப்பை - இறுதிச்சுற்றில் இந்தியா தோல்வி.

2019 - ஒரு நாள் உலகக் கோப்பை - அரையிறுதியில் இந்தியா தோல்வி..

2021 - டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் - இறுதிச்சுற்றில் இந்தியா தோல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com