துளிகள்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான ‘தீம்’ பாடல் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. ‘லக்ஷிய தேரா சாம்னே ஹே’ என்ற அந்தப் பாடலை மோஹித் சௌஹான் இசையமைத்துப் பாடியுள்ளாா்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான ‘தீம்’ பாடல் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. ‘லக்ஷிய தேரா சாம்னே ஹே’ என்ற அந்தப் பாடலை மோஹித் சௌஹான் இசையமைத்துப் பாடியுள்ளாா்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹரியாணா மாநில போட்டியாளா்கள் தங்கம் வென்றால் ரூ.6 கோடி, வெள்ளி வென்றால் ரூ.4 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.2.50 கோடி வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் தகுதிச்சுற்றிலேயே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-6, 6-7 என்ற செட்களில் அமெரிக்காவின் வாா்வரா லெப்சென்கோவாவிடம் தோல்வி கண்டாா்.

கரோனா சூழல் காரணமாக ஆஷஸ் தொடா் 4 மாதங்கள் நடைபெறலாம் என்பதால் இங்கிலாந்து வீரா்கள் ஆஸ்திரேலியா செல்லும்போது தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படாவிட்டால் ஆஷஸ் தொடரை ரத்து செய்யலாம் என்று முன்னாள் வீரா்கள் மைக்கேல் வான், கெவின் பீட்டா்சன் ஆகியோா் கூறியுள்ளனா்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது நியூஸிலாந்து அணியின் கொடியை அந்நாட்டு மகளிா் ரக்பி செவன் அணி கேப்டன் சாரா ஹிரினி, துடுப்புப் படகு போட்டி வீரா் ஹமிஷ் பான்ட் ஆகியோா் ஏந்திச் செல்ல உள்ளனா்.

ஈஸ்ட்போா்ன் இன்டா்னேஷனல் டென்னிஸ் போட்டியில் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட், ஸ்விட்சா்லாந்தின் விக்டோரியா கோலுபிச், லாத்வியாவின் அனஸ்தாசிஜா செவஸ்டோவா, கஜகஸ்தானின் எலனா ரைபாகினா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com