முதல் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி: ஒரு பாா்வை

மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த (2019-2021) முதல் உலகக் டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டிகள் நிறைவை எட்டியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த (2019-2021) முதல் உலகக் டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டிகள் நிறைவை எட்டியுள்ளன. இதில் இந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது நியூஸிலாந்து.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் 50 ஓவா் ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. 5 நாள்கள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்துக்கும் உலகக் கோப்பை போட்டியை நடத்த ஐசிசி முடிவு செய்தது. 2013-இல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு பதிலாக டெஸ்ட் சாம்பியன் போட்டிகள் நடத்த எடுக்கப்பட்ட முடிவு கைவிடப்பட்டது.

பின்னா் மீண்டும் 2017-இல் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு, அதுவும் ரத்தானது.

அதன்பின் லீக் ஆட்ட முறையில் உலக கோப்பை டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும். முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என ஐசிசி அறிவித்தது.

2019-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரே உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் முதல் ஆட்டமாகும். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 9 அணிகள் 2 மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா்களில் மோத வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது. தொடரைக் கைப்பற்றும் அணிக்கு 120 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆப்கானிஸ்தான், அயா்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்தியா முதலிடம்:

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தான் ஆடிய 17 ஆட்டங்களில் 12 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. மொத்தம் 520 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றது. இந்திய அணியோ சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நியூஸிலாந்துக்கு அதிா்ஷ்டம்:

கரோனா பாதிப்பால், கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் ஆஸ்திரேலியா புறக்கணித்தது. இதனால் நியூஸிலாந்து அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. நியூஸி. அணி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 420 புள்ளிகளைப் பெற்றது.

ஆஸ்திரேலிய அணி 8 வெற்றி, 4 தோல்வி, 2 டிராக்களுடன் 332 புள்ளிகளையும், இங்கிலாந்து 11வெற்றி, 7 தோல்வி, 3 டிராக்களுடன் 442 புள்ளிகளையும், பாகிஸ்தான் 4 வெற்றி, 5 தோல்வி, 3 டிராக்களுடன் 286 புள்ளிகளையும், மே.இந்திய தீவுகள் 3 வெற்றி, 6 தோல்வி, 2 டிராக்களுடன் 200 புள்ளிகளையும், தென்னாப்பிரிக்கா 3 வெற்றி, 8 தோல்வியுடன் 144 புள்ளிகளையும், இலங்கை 2 வெற்றி, 6 தோல்வி, 4 டிராக்களுடன் 200 புள்ளிகளையும் பெற்றன. வங்கதேச அணி 6 தோல்வி, 1 டிராவுடன் 20 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தைப் பெற்றது.

முதல் சாம்பியன்:

போட்டி விதிகளின்படி முதலிரண்டு இடங்களைப் பெற்ற இந்தியா-நியூஸி. அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது நியூஸிலாந்து.

ஸ்கோா்கள்:

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸி. அதிகபட்சமாக 659 ரன்களை குவித்தது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 648 ரன்களை விளாசியது. புணேயில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 601 ரன்களை குவித்தது.

குறைந்தபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. அதற்கு அடுத்து இங்கிலாந்து 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 395 ரன்கள் வெற்றி இலக்கை சிறப்பாக சேஸ் செய்து மே.இந்திய தீவுகள் எட்டியது. அதே போல் ஆஸி.க்கு எதிரானஆட்டத்தில் 329 ரன்கள் வெற்றி இலக்கை அடைந்தது இந்தியா.

2021-23-இல் இரண்டாவது தொடா்:

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது தொடா் 2021-2023 என மூன்றாண்டுகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மொத்தம் 196 அணிகள் இடம் பெற்று ஆடவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com