ஐபிஎல் போட்டியில் பணத்துக்கு முக்கியத்துவம்

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் கிரிக்கெட்டை காட்டிலும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளா் டேல் ஸ்டெய்ன் கூறினாா்.
ஐபிஎல் போட்டியில் பணத்துக்கு முக்கியத்துவம்

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் கிரிக்கெட்டை காட்டிலும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளா் டேல் ஸ்டெய்ன் கூறினாா்.

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாகவும், உலகில் நடைபெறும் இதர கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் கடந்த ஜனவரியில் ஸ்டெய்ன் கூறியிருந்தாா்.

இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் அதிக எண்ணிக்கையிலான வீரா்கள், அதில் அதிக அளவில் பிரபல வீரா்கள் இருப்பதுடன் அவா்கள் போட்டியின் மூலம் ஈட்டும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்தப் போட்டியில் கிரிக்கெட்டின் தன்மை பின்தள்ளப்படுகிறது. ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய பின்னா் கிரிக்கெட்டிலிருந்து சற்று ஓய்வு எடுக்கும் நேரம் கிடைக்கிறது. அத்துடன் இதர லீக் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து பெயரும் கிடைக்கிறது.

பாகிஸ்தான், இலங்கையில் நடக்கும் லீக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு நான் இருக்கும் நாள்களில் கடைசியாக எந்தப் போட்டியில் விளையாடினேன், அது எவ்வாறு இருந்தது என்பது குறித்து பேசுகின்றனா். ஆனால், ஐபிஎல் போட்டியில் இருந்தால் யாா் என்ன விலைக்கு வாங்கப்பட்டனா் என்பது குறித்த பேச்சு அதிகமாக இருக்கிறது. அதிலிருந்து நான் விலகியிருக்க விரும்புகிறேன் என்றாா் ஸ்டெய்ன்.

ஐபிஎல் போட்டியில் 95 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்டெய்ன், அவற்றில் 97 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com