ஐபிஎல் பற்றிய கருத்து: வருத்தம் தெரிவித்தார் டேல் ஸ்டெய்ன்

ஐபிஎல் போட்டி பற்றிய தனது கருத்துக்குப் பிரபல வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் பற்றிய கருத்து: வருத்தம் தெரிவித்தார் டேல் ஸ்டெய்ன்

ஐபிஎல் போட்டி பற்றிய தனது கருத்துக்குப் பிரபல வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

2008-ல் இருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடும் டேல் ஸ்டெய்ன், இதுவரை 95 ஆட்டங்களில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2020-ல் ஆர்சிபி அணி சார்பாக 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். 2020 ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் ஒரு பேட்டியில் ஐபிஎல் போட்டி பற்றி ஸ்டெய்ன் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் அதிக எண்ணிக்கையிலான வீரா்கள், அதில் அதிக அளவில் பிரபல வீரா்கள் இருப்பதுடன் அவா்கள் போட்டியின் மூலம் ஈட்டும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்தப் போட்டியில் கிரிக்கெட்டின் தன்மை பின்தள்ளப்படுகிறது. பாகிஸ்தான், இலங்கையில் நடக்கும் லீக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு நான் இருக்கும் நாள்களில் கடைசியாக எந்தப் போட்டியில் விளையாடினேன், அது எவ்வாறு இருந்தது என்பது குறித்து பேசுகின்றனா். ஆனால், ஐபிஎல் போட்டியில் இருந்தால் யாா் என்ன விலைக்கு வாங்கப்பட்டனா் என்பது குறித்த பேச்சு அதிகமாக இருக்கிறது. ஐபிஎல் போட்டி நீண்ட நாள்கள் நடைபெறுவதால் தான் கடந்த வருடம் அப்போட்டியில் பங்கேற்கவில்லை. எனக்குச் சிறிது ஓய்வு தேவைப்பட்டது. ஐபிஎல்லை விடவும் மற்ற லீக் போட்டிகளில் விளையாடும்போது கொஞ்சம் அதிகப் பயன் கிடைக்கிறது என்றாா்.

ஸ்டெய்னின் இந்தப் பேட்டிக்கு இந்திய ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையடுத்து தன்னுடைய கருத்தால் யாருக்காவது வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி எனக்கும் இதர வீரர்களுக்கு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

எந்த ஒரு லீக் போட்டியுடனும் ஒப்பிட்டு தரம்தாழ்த்தவோ அவமானப்படுத்தவோ திட்டமிடவில்லை. தவறான அர்த்தம் கற்பிப்பதை சமூகவலைத்தளங்கள் அடிக்கடி செய்யக்கூடும். 

என்னுடைய கருத்தால் யாருக்காவது வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com