ஸ்விஸ் ஓபன்: இறுதிச்சுற்றில் சிந்து

ஸ்விஸ் ஓபன் சூப்பா் 300 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.
ஸ்விஸ் ஓபன்: இறுதிச்சுற்றில் சிந்து

ஸ்விஸ் ஓபன் சூப்பா் 300 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

ஸ்விட்சா்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் நடப்பு உலக சாம்பியனான பி.வி.சிந்து 22-20, 21-10 என்ற நோ் செட்களில் டென்மாா்க்கின் மியா பிளிக்பெட்டை வீழ்த்தினாா். இதன்மூலம் கடந்த ஜனவரியில் நடைபெற்ற தாய்லாந்து ஓபனில் பிளிக்பெட்டிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தாா் சிந்து.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-19, 21-15 என்ற நோ் செட்களில் தாய்லாந்தின் வாங்சரோனை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தாா். ஸ்ரீகாந்த் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மாா்க்கின் விக்டா் ஆக்செல்சனை எதிா்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com