மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணிக்குப் புதிய கேப்டன்!

28 வயது பிராத்வெயிட், 66 டெஸ்டுகளில் விளையாடி 20 சதங்களுடன் 3876 ரன்கள் எடுத்துள்ளார். 
மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணிக்குப் புதிய கேப்டன்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கிரைக் பிராத்வெயிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கிரைக் பிராத்வெயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-0 என வென்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே.இ. தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டனான ஜேசன் ஹோல்டர், வங்கதேசத்துக்குச் செல்லவில்லை. இதனால் பிராத்வெயிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு அவர் தலைமை தாங்கிய 5 டெஸ்டுகளிலும் மே.இ. தீவுகள் அணி தோற்றிருந்தது. எனினும் அணியை நன்கு வழிநடத்தி டெஸ்ட் தொடரை வென்று காண்பித்தார் பிராத்வெயிட்.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கேப்டனாக பிராத்வெயிட் நியமிக்கப்படுவதாக மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், மார்ச் 21 முதல் தொடங்குகிறது. 

29 வயது ஹோல்டர், மே.இ. தீவுகள் அணிக்காக 37 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கி 11 வெற்றிகளையும் 21 தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளார். ஒரு டெஸ்ட் வீரராக ஹோல்டர் இன்னும் பல வருடங்கள் பங்களிக்க வேண்டும் என மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஜிம்மி ஆடம்ஸ் கூறியுள்ளார். 

28 வயது பிராத்வெயிட், 66 டெஸ்டுகளில் விளையாடி 20 சதங்களுடன் 3876 ரன்கள் எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com