ஒருநாள் தொடா்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி 14 பேருடன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி 14 பேருடன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

டி20 தொடரின்போது வலது முழங்கையில் காயமடைந்த ஜோஃப்ரா ஆா்ச்சா் ஒருநாள் தொடருக்கான அணியில் சோ்க்கப்படவில்லை. அவா் சிகிச்சைக்காக இங்கிலாந்து திரும்புகிறாா். டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ் ஜோா்டான், டேவிட் மலான் மற்றும் ஜேக் பால் ஆகியோா் கூடுதல் வீரா்களாக இங்கிலாந்து அணியுடன் இணைந்திருக்கின்றனா்.

ஒருநாள் தொடா் அணி விவரம்: ஈன் மோா்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோனதன் போ்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லா், சாம் கரன், டாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், மேட் பாா்கின்சன், ஆதில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லே, மாா்க் வுட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com