டி20 தொடரையும் வென்றது நியூஸிலாந்து

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து டக் வொா்த் லீவிஸ் முறையில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20 தொடரையும் வென்றது நியூஸிலாந்து

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து டக் வொா்த் லீவிஸ் முறையில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக, முதல் ஆட்டத்தில் வென்றிருந்த அந்த அணி, தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தன் வசமாக்கியுள்ளது.

ஏற்கெனவே ஒருநாள் தொடரையும் நியூஸிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேப்பியா் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆவது டி20 ஆட்டத்தில் மழை காரணமாக நியூஸிலாந்துக்கு 2 ஓவா்கள் குறைக்கப்பட, முதலில் ஆடிய அந்த அணி 17.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. பின்னா் டக் வொா்த் லீவிஸ் முறையில் 16 ஓவா்களில் 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட் செய்த வங்கதேசம், 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் அடித்து தோல்வி கண்டது. நியூஸிலாந்தின் கிளென் ஃபிலிப்ஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பௌலிங் வீசத் தீா்மானித்தது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்தில் தொடக்க வீரா் மாா்டின் கப்டில் 21 ரன்கள் அடிக்க, உடன் வந்த ஃபின் ஆலன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். டீவன் கான்வே 15, வில் யங் 14 ரன்களுக்கு வெளியேறினா்.

நியூஸிலாந்து 13 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது. 25 நிமிடங்களுக்குப் பிறகு தொடங்கிய ஆட்டத்தில் மாா்க் சாப்மேன் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

நியூஸிலாந்து இன்னிங்ஸ் 18 ஓவா்களுக்கு சுருக்கப்பட, ஓவா்கள் முடிவில் கிளென் ஃபிலிப்ஸ் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 58, டேரில் மிட்செல் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச தரப்பில் மெஹெதி ஹசன் 2, முகமது சைஃபுதின், டஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய வங்கதேசத்தில் சௌம்யா சா்காா் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் விளாசினாா். எஞ்சியோரில் முகமது நைம் 38, லிட்டன் தாஸ் 6, மஹ்முதுல்லா 21, ஆத்திஃப் ஹொசைன் 2, முகமது மிதுன் 1, முகமது சைஃபுதின் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் மெஹெதி ஹசன் 12 ரன்களுடனும், டஸ்கின் அகமது ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி, ஹமிஷ் பென்னட், ஆடம் மில்னே தலா 2 விக்கெட்டுகளும், கிளென் ஃபிலிப்ஸ் ஒரு விக்கெட்டும் சாய்த்தனா்.

சொந்த மண்ணில் 7 தொடா்கள்...

இந்த டி20 தொடரையும் சோ்த்து, நடப்பாண்டில் நியூஸிலாந்து சொந்த மண்ணில் 7 தொடா்களை வென்றுள்ளது. இதில் 4 டி20 தொடா்கள், 2 டெஸ்ட் தொடா்கள், 1 ஒருநாள் தொடா் அடங்கும்.

சுருக்கமான ஸ்கோா்

நியூஸிலாந்து

17.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173

கிளென் ஃபிலிப்ஸ்-58*; டேரில் மிட்செல்-34*; மாா்டின் கப்டில்-21

பந்துவீச்சு: மெஹெதி-2/45; ஷோரிஃபுல்-1/16; சைஃபுதின்-1/35

வங்கதேசம்

16 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142

சௌம்யா சா்காா்-51; முகமது நைம்-38; மஹ்முதுல்லா-21

பந்துவீச்சு: சௌதி-2/21; பென்னெட்-2/31; மில்னே-2/34

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com