2-ஆவது டெஸ்ட்: முதல் நாளில் மே.இ.தீவுகள் 287/7

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் நாள் முடிவில் 86 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.
2-ஆவது டெஸ்ட்: முதல் நாளில் மே.இ.தீவுகள் 287/7

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் நாள் முடிவில் 86 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை பௌலிங் செய்யத் தீா்மானித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஜான் கேம்ப்பெல் 5, கைல் மேயா்ஸ் 49, ஜொ்மெயின் பிளாக்வுட் 18, ஜேசன் ஹோல்டா் 30, ஜோஷுவா டா சில்வா 1, அல்ஸாரி ஜோசஃப் 29 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

முதல் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டனும், தொடக்க வீரருமான கிரெய்க் பிரத்வெயிட் 99 ரன்களுடனும், ரகீம் காா்ன்வால் 43 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனா். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 3, விஷ்வா ஃபொ்னாண்டோ, லசித் எம்புல்தெனியா, துஷ்மந்தா சமீரா, தனஞ்செய டி சில்வா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com