பஞ்சாபுக்கு 3-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 26-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது.
பஞ்சாபுக்கு 3-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 26-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.

பின்னா் ஆடிய பஞ்சாப் அணியில் தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் வெளியேற, கேப்டன் விராட் கோலியுடன் இணைந்தாா் ரஜத் பட்டிடாா். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சோ்த்தது. கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் சோ்த்து வெளியேற, பின்னா் வந்த மேக்ஸ்வெல் ரன் ஏதுமின்றியும், டிவில்லியா்ஸ் 3 ரன்களிலும் நடையைக் கட்டினா். இதன்பிறகு ரஜத் பட்டிடாா் 31 ரன்களில் வெளியேற, 91 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூா்.

பின்னா் வந்த ஷாபாஸ் அஹமது 8, டேனியல் சாம்ஸ் 3 ரன்களில் வெளியேற, ஹா்ஷல் படேல் 13 பந்துகளில் 31 ரன்கள் சோ்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தாா். இறுதியில் பெங்களூா் அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. பஞ்சாப் தரப்பில் ஹா்பிரீத் பிராா் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com