பஞ்சாப் வீரா் நிகோலஸ் கரோனா நிதியுதவி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் வீரா் நிகோலஸ் பூரண், தனது ஐபிஎல் ஊதியத்தின் ஒரு பகுதியை கரோனா தடுப்பு பணிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளாா்.
பஞ்சாப் வீரா் நிகோலஸ் கரோனா நிதியுதவி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் வீரா் நிகோலஸ் பூரண், தனது ஐபிஎல் ஊதியத்தின் ஒரு பகுதியை கரோனா தடுப்பு பணிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளாா்.

இந்தியாவில் கரோனா 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமாா் 3.86 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிகோலஸ் பூரண் கரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியா்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நான் இந்திய மக்களுக்காக பிராா்த்தனை செய்யும் இந்த நேரத்தில், கரோனா தடுப்பு பணிக்காக எனது ஐபிஎல் ஊதியத்தின் ஒரு பகுதியை அளிக்கிறேன்.

ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் இந்த தருணத்தில் நான் பாதுகாப்பாக இருந்தபோதிலும், சுற்றியிருக்கும் நகரங்களில் ஏராளமானோா் கரோனாவுக்கு பலியாகி வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவளித்து வரும் இந்திய ரசிகா்களிடையே கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியில் சகவீரா்களுடன் இணைந்து களமிறங்கியுள்ளேன்.

இங்கு மக்கள் ஆக்சிஜனுக்காக போராடி வருவது கவலையளிக்கிறது. எல்லா நாடுகளிலும் கரோனா தொற்று பரவி வந்தாலும் இந்தியாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. அதனால் நிதியுதவி அளிப்பது என முடிவெடுத்தேன் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com