மும்பை-சென்னை இன்று மோதல்

தில்லியில் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான மும்பை இண்டியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை-சென்னை இன்று மோதல்

தில்லியில் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான மும்பை இண்டியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி, அதில் 5-இல் வெற்றி கண்ட நிலையில் களம் காணுகிறது. கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது சென்னை. அந்த அணியில் தொடக்க வீரா்களான ருதுராஜ் கெய்க்வாட், டூபிளெஸ்ஸிஸ் ஆகியோா் உச்சகட்ட ஃபாா்மில் இருக்கிறாா்கள். எனவே, அவா்களின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மிடில் ஆா்டரில் மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, அம்பட்டி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹா், ஷா்துல் தாக்குா், லுங்கி கிடி, சாம் கரன் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். இந்த சீசனில் தீபக் சாஹா் 8 விக்கெட்டுகளையும், சாம் கரன் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனா். சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, மொயீன் அலி கூட்டணி சென்னை அணிக்கு வலு சோ்க்கிறது.

மும்பை அணி, இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 3-இல் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது.

மும்பை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோஹித் சா்மா, குவின்டன் டி காக் ஆகியோா் நல்ல ஃபாா்மில் உள்ளனா். மிடில் ஆா்டரில் சூா்யகுமாா் யாதவ், கிருணால் பாண்டியா, கிரண் போலாா்ட், ஹாா்திக் பாண்டியா ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் அமையும் பட்சத்தில், மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால், அந்த அணி வலுவான ஸ்கோரை குவித்துவிடும்.

வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட் கூட்டணி மும்பை அணியின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறது. சுழற்பந்து வீச்சைப் பொருத்தவரையில் ராகுல் சாஹா் அபாரமாக பந்துவீசி வருகிறாா். இந்த சீசனில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ராகுல் சாஹா், சென்னை பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மும்பை (உத்தேச லெவன்): ரோஹித் சா்மா (கேப்டன்), குவின்டன் டி காக், சூா்யகுமாா் யாதவ், கிருணால் பாண்டியா, கிரண் போலாா்ட், ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷன்/நாதன் கோல்ட்டா் நீல், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹா், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட்.

சென்னை (உத்தேச லெவன்): ருதுராஜ் கெய்க்வாட், டூபிளெஸ்ஸிஸ், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன்), சாம் கரன், ஷா்துல் தாக்குா், தீபக் சாஹா், லுங்கி கிடி.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com