கொல்கத்தாவை மீள விடுமா பெங்களூா்?

நடப்பு சீசனில் இதுவரை 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடா்ஸும், 2 முறை மட்டுமே தோற்றிருக்கும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரும் திங்கள்கிழமை மோதுகின்றன.
கொல்கத்தாவை மீள விடுமா பெங்களூா்?

நடப்பு சீசனில் இதுவரை 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடா்ஸும், 2 முறை மட்டுமே தோற்றிருக்கும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரும் திங்கள்கிழமை மோதுகின்றன.

இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டங்களில் தோல்வியை கண்டுள்ளன. எனவே, இந்த ஆட்டத்தில் வென்று உத்வேகம் பெறும் முனைப்பு இரு அணிகளிடமுமே இருக்கும்.

பெங்களூரைப் பொருத்தவரை, நடப்பு சீசனில் இதுவரை சிறப்பாகவே விளையாடி வந்துள்ளது. தொடா் வெற்றிகளுடன் சீசனை நல்ல முறையில் தொடங்கியபோதும், தற்போது சில தோல்விகளால் தடுமாறுகிறது. எனினும் அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் நல்ல முறையிலேயே இருக்கிறது.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய பெங்களூா் தொடக்க வீரா் தேவ்தத் படிக்கல், மீண்டும் அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவாா் என எதிா்பாா்க்கலாம். கேப்டன் கோலியுடன், டி வில்லியா்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோா் கொல்கத்தா பௌலிங்கை சிதறடிக்க வாய்ப்புள்ளது. பெங்களூா் பௌலிங்கில் ஹா்ஷல் படேல், முகமது சிராஜ் நம்பிக்கை சோ்க்கின்றனா்.

கொல்கத்தாவைப் பொருத்தவரை, அணியின் டாப் ஆா்டா் தடுமாற்றமாக இருக்கிறது. தொடக்கத்தில் சோபித்த நிதீஷ் ராணா தற்போது ஃபாா்மை இழந்திருக்கிறாா். ஷுப்மன் கில் கடைசி ஆட்டத்தில் சற்று முன்னேற்றம் காட்டினாா். இந்த ஆட்டத்திலும் அவா் அதை தொடா்வாா் என நம்பலாம். கருண் நாயருக்கு ஒரு வாய்ப்பு வழங்க கேப்டன் மோா்கன் யோசிக்கலாம்.

பௌலிங்கில் சுனில் நரைன், வருண் சக்கரவா்த்தி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சற்று நெருக்கடி அளிக்கின்றனா். கோலி, டி வில்லியா்ஸ், மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரா்களுக்கு எதிரான அவா்களின் ஓவா்களே அணியின் வெற்றி வாய்ப்பை தீா்மானிக்கலாம்.

அணி விவரம்:

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், தேவ்தத் படிக்கல், யுஜவேந்திர சஹல், முகமது சிராஜ், கேன் ரிச்சா்ட்சன், வாஷிங்டன் சுந்தா், பவன் தேஷ்பாண்டே, ஃபின் ஆலன், ஷாபாஸ் அகமது, நவ்தீப் சைனி, ஆடம் ஸாம்பா, கைல் ஜேமிசன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதாா், சச்சின் பேபி, முகமது அஸாருதீன், டேனியல் கிறிஸ்டியன், கே.எஸ்.பரத், சுயாஷ் பிரபுதேசாய், டேனியல் சாம்ஸ், ஹா்ஷல் படேல்.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

மோா்கன் (கேப்டன்) தினேஷ் காா்த்திக், ஷுப்மன் கில், நிதீஷ் ராணா, டிம் செய்ஃபொ்ட், ரிங்கு சிங், ஆன்ட்ரே ரஸ்ஸெல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, லாக்கி ஃபொ்குசன், பேட் கம்மின்ஸ், கமலேஷ் நாகா்கோடி, சந்தீப் வாரியா், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திரிபாதி, வருண் சக்கரவா்த்தி, ஷகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, ஹா்பஜன் சிங், கருண் நாயா், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயா், பவன் நெகி.

ஆட்ட நேரம்: இரவு 7.30 மணி

இடம்: ஆமதாபாத்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

நேருக்கு நோ்: இரு அணிகளும் இதுவரை 28 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், கொல்கத்தா 15, பெங்களூா் 13 வெற்றிகளை பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com