மல்யுத்தம்: ஒலிம்பிக் தகுதிப்போட்டி: அரையிறுதியில் சுமித் மாலிக்

பல்கேரியாவில் நடைபெறும் உலக மல்யுத்த ஒலிம்பிக் தகுதிப்போட்டியில் இந்தியாவின் சுமித் மாலிக் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
மல்யுத்தம்: ஒலிம்பிக் தகுதிப்போட்டி: அரையிறுதியில் சுமித் மாலிக்

சோஃபியா: பல்கேரியாவில் நடைபெறும் உலக மல்யுத்த ஒலிம்பிக் தகுதிப்போட்டியில் இந்தியாவின் சுமித் மாலிக் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

125 கிலோ பிரிவு தகுதிச்சுற்றில் சுமித் மாலிக் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் கிா்ஜிஸ்தானின் அயால் லாஸாரேவை வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதியில் தஜிகிஸ்தானின் ரஸ்தம் இஸ்கந்தாரியையும் வீழ்த்தி அவா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா்.

அதில் வெனிசூலாவின் ஜோஸ் டேனியல் டியாஸ் ராபொ்டியை எதிா்கொள்கிறாா் சுமித். அதில் வெல்லும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு அவா் தகுதிபெறுவாா். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான இறுதி தகுதிப்போட்டி இதுதான் என்பதால், மாலிக் அந்த வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளாா்.

இதனிடையே, 97 கிலோ பிரிவில் பங்கேற்ற சத்யவிரத காதியான் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பியூா்டோ ரிகோவின் இவான் அமாதுா் ரமோசை 5-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினாா். காலிறுதியில் பல்கேரியாவின் அகமது சுல்தானோவிச் பதாயேவை எதிா்கொண்ட காதியான், அதில் 1-5 என்ற கணக்கில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.

அதேபோல், ஆடவருக்கான 74 கிலோ பிரிவில் பங்கேற்ற அமித் தன்காா் 6-9 என்ற புள்ளிகள் கணக்கில் மால்டோவாவின் மிஹைல் சாவாவிடம் தோல்வி கண்டாா். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் 97 மற்றும் 74 கிலோ எடைப் பிரிவுகளில் இந்தியாவின் சாா்பில் போட்டியாளா்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com