ரோஹித் சர்மாவுக்குப் பந்துவீசுவது சுலபம்: பாகிஸ்தான் வீரர் முகமது அமிர்

ரோஹித் சர்மா, விராட் கோலியை விடவும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பந்துவீசுவது கடினம் என...
ரோஹித் சர்மாவுக்குப் பந்துவீசுவது சுலபம்: பாகிஸ்தான் வீரர் முகமது அமிர்

ரோஹித் சர்மா, விராட் கோலியை விடவும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பந்துவீசுவது கடினம் என பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித் பற்றி அவர் கூறியதாவது:

விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் பந்துவீசியபோது எனக்குச் சிரமம் ஏற்பட்டதில்லை. ரோஹித் சர்மாவுக்குப் பந்துவீசுவது சுபலமானது. இரு வழிகளிலும் என்னால் அவரை ஆட்டமிழக்கச் செய்யமுடியும். இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீசும் இன் ஸ்விங் பந்துவீச்சுக்கு அவர் தடுமாறுவார். அதேபோல ஆரம்பத்தில் பந்து ஆஃப் சைட் பக்கம் செல்லும்போதும் அவரிடம் தடுமாற்றம் இருக்கும். 

விராட் கோலிக்குப் பந்துவீசுவது ஓரளவு சிரமமானது. அழுத்தமான சூழலில் அவர் நன்றாக விளையாடுவார். மற்றபடி இருவருக்கும் பந்துவீசியபோது எனக்குக் கடினமாக இருந்ததில்லை. 

ஆனால் ஸ்டீஸ் ஸ்மித்துக்குப் பந்துவீசுவது எளிதல்ல. அவர் ஆடும் விதத்தால் பந்துவீசுவது கடினமாக இருக்கும். அவுட் ஸ்விங்கர் வீசினால் பேட்டை மேலே தூக்கி அடிக்காமல் விட்டுவிடுவார். கால்காப்புப் பக்கம் வீசினால் பிளிக் செய்து ரன்கள் எடுப்பார் என்று கூறியுள்ளார்.

கடந்த 2010-ல் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது அப்போதைய கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமிர் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு தடை விதித்தது ஐசிசி. இவர்களில் முகமது அமிர் 5 ஆண்டு தண்டனைக் காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து 2016-ல் அணிக்குத் திரும்பினார்.

முகமது அமிர் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் சிக்கியபோது அவருக்கு வயது 18. அவர் அப்போது 14 டெஸ்ட், 15 ஒரு நாள் போட்டி, 18 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தார். பிறகு 2016-ல், இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். 27 வயதில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

எனினும் கடந்த டிசம்பர் மாதம், தற்போதைய நிர்வாகத்தின் தலைமையில் தன்னால் விளையாட முடியாது என அமிர் அறிக்கை வெளியிட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு ஜனவரி மாதம் ட்விட்டரில் முகமது அமிர் கூறியதாவது: தற்போதைய நிர்வாகம் பதவியை விட்டு விலகினால் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடத் தயாராக உள்ளேன். எனவே தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறினார். 

28 வயது அமிர், பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்டுகள், 61 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com