ஆஸ்திரேலியாவுக்கு தோனி, பாண்டியாவைப் போல் வீரர்கள் தேவை: பாண்டிங்

​டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி பினிஷிங்குக்கு சரியான வீரர் இல்லாமல்  இருப்பதாக முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு தோனி, பாண்டியாவைப் போல் வீரர்கள் தேவை: பாண்டிங்


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி பினிஷிங்குக்கு சரியான வீரர் இல்லாமல்  இருப்பதாக முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்தது:

"ஆஸ்திரேலிய அணியில் எப்போதும் வருத்தமளிக்கக்கூடிய இடம் 'பினிஷிங்'தான். 50 ரன்கள் தேவை என்ற நிலையில், 3, 4 ஓவர்கள் மட்டுமே இருக்கும் நேரத்தில் களமிறங்கி இலக்கை அடையக்கூடிய திறன் தேவையுள்ள மிகவும் கடினமான பொறுப்பு.

தோனி தனது முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும் பினிஷிங் பொறுப்பை ஏற்று விளையாடினார். அதில் அவர் சிறந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஹார்திக் பாண்டியா மற்றும் கைரன் பொல்லார்ட் இதுபோன்ற வீரர்கள்தான். இவர்கள் அவர்களது நாட்டுக்கும் ஐபிஎல் அணிக்கும் தொடர்ந்து வெற்றியைத் தேடித் தருவார்கள். அவர்கள் இந்த வரிசையில்தான் தொடர்ந்து களமிறங்கவுள்ளார்கள்.  

ஆஸ்திரேலியாவில் இதுபோல சிறந்த பினிஷர் இல்லாமல் போனதற்குக் காரணம், ஆஸ்திரேலியாவின் அனைத்து சிறந்த பேட்ஸ்மேன்களும் பிக் பாஷ் லீக்கில் முதல் 4 வரிசையில்தான் களமிறங்குகிறார்கள்.

எனவே, அந்த இடத்தில் தொடர்ச்சியாக எந்தவொரு வீரரும் களமிறங்கவில்லை. அந்தப் பொறுப்புக்குத்தான் சரியான வீரரைக் கண்டறிய வேண்டும். 

ஆஸ்திரேலிய அணியில் அந்தப் பொறுப்பை வெற்றிகரமாகச் செய்யப்போவது கிளென் மேக்ஸ்வெல்லா, மிட்செல் மார்ஷா, மார்கஸ் ஸ்டாய்னிஸ்ஸா?

ஸ்டாய்னிஸை கடந்தாண்டு டெல்லி அணியில் பார்த்தேன். பிக்பாஷ் லீக்கில் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு சிறப்பான பங்களிப்பையாற்றி வருகிறார். ஆனால், ஆட்டத்தை முடிப்பதற்கு ஒரு வீரர் தேவை. ஒன்றிரண்டு ஆட்டங்கள் தனிநபராக வெற்றியைத் தேடித் தர வேண்டும்.  

வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், கடைசி கட்டத்தில் தொடர்ச்சியாக களமிறங்கினால் அவர்கள் அதில் நிபுணத்துவம் அடைவார்கள். 

கடைசி கட்டத்தில் தொடர்ச்சியாக பேட்டிங் செய்தால் நிறைய வீரர்களும் பலனடைவார்கள். ஆனால், தங்களது சிறந்த வீரர்களைப் பின்வரிசையில் களமிறக்குவதற்கு பிக்பாஷ் லீக் அணிகளைச் சம்மதிக்கவைப்பது கடினம்தான்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com