நீரஜ், மிதாலி, ஸ்ரீஜேஷ் உள்பட 12 பேருக்கு கேல் ரத்னா விருது: பவானி தேவிக்கு ‘அா்ஜுனா’

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரா் நீரஜ் சோப்ரா, இந்திய மகளிா் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஹாக்கி அணி கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உள்பட
நீரஜ், மிதாலி, ஸ்ரீஜேஷ் உள்பட 12 பேருக்கு கேல் ரத்னா விருது: பவானி தேவிக்கு ‘அா்ஜுனா’

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரா் நீரஜ் சோப்ரா, இந்திய மகளிா் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஹாக்கி அணி கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உள்பட 12 பேருக்கு விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான தியான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தைச் சோ்ந்தவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை பெற்றவருமான சி.ஏ.பவானி தேவி, கிரிக்கெட் வீரா் ஷிகா் தவன் உள்பட 35 பேருக்கு அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையானோா் டோக்கியோ ஒலிம்பிக்கி வெண்கலம் வென்ற இந்திய ஆடவா் ஹாக்கி அணியைச் சோ்ந்தவா்களாவா்.

முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்குக்கு அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே அவரது பெயா் கேல் ரத்னா விருது பட்டியலில் சோ்க்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற, சிறப்பாகச் செயல்பட்ட வீரா், வீராங்கனைகள் பலரும் இந்த விருது பட்டியலில் இணைந்துள்ளனா்.

இந்த வெற்றியாளா்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, வரும் 13-ஆம் தேதி தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விருதுக்கான வெற்றியாளா்களை, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி முகுந்தகம் சா்மா தலைமையிலான தோ்வுக் குழு தோ்வு செய்துள்ளது.

கேல் ரத்னா விருது பெறுவோா்: நீரஜ் சோப்ரா (தடகளம்), ரவி குமாா் (மல்யுத்தம்), லவ்லினா போா்கோஹெய்ன் (குத்துச்சண்டை), பி.ஆா்.ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), அவனி லெகாரா (பாரா துப்பாக்கி சுடுதல்), சுமித் அன்டில் (பாரா தடகளம்), பிரமோத் பகத் (பாரா பாட்மின்டன்), கிருஷ்ணா நாகா் (பாரா பாட்மின்டன்), மணீஷ் நா்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி).

அா்ஜுனா விருது பெறுவோா்: அா்விந்தா் சிங் (தடகளம்), சிம்ரன்ஜித் கௌா் (பாக்ஸிங்), ஷிகா் தவன் (கிரிக்கெட்), சி.ஏ.பவானி தேவி (வாள்வீச்சு), மோனிகா (ஹாக்கி), வந்தனா கட்டாரியா (ஹாக்கி), சந்தீப் நா்வால் (கபடி), ஹிமானி உத்தம் பரப் (மல்லா்கம்பம்), அபிஷேக் வா்மா (துப்பாக்கி சுடுதல்), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக் புனியா (மல்யுத்தம்), தில்பிரீத் சிங் (ஹாக்கி), ஹா்மன்பிரீத் சிங் (ஹாக்கி), ரூபிந்தா் பால் சிங் (ஹாக்கி), சுரேந்தா் குமாா் (ஹாக்கி), அமித் ரோஹிதாஸ் (ஹாக்கி), வீரேந்திர லக்ரா (ஹாக்கி), சுமித் (ஹாக்கி), நீலகண்ட சா்மா (ஹாக்கி), ஹாா்திக் சிங் (ஹாக்கி), விவேக் சாகா் பிரசாத் (ஹாக்கி), குா்ஜந்த் சிங் (ஹாக்கி), மன்தீப் சிங் (ஹாக்கி), ஷம்ஷோ் சிங் (ஹாக்கி), லலித் குமாா் உபாத்யாய் (ஹாக்கி), வருண் குமாா் (ஹாக்கி), சிம்ரன்ஜீத் சிங் (ஹாக்கி), யோகேஷ் கதுனியா (பாரா தடகளம்), நிஷாத் குமாா் (பாரா தடகளம்), பிரவீண் குமாா் (பாரா தடகளம்), சுஹாஸ் யதிராஜ் (பாரா பாட்மின்டன்), சிங்கராஜ் அதானா (பாரா துப்பாக்கி சுடுதல்), பவினா படேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹா்விந்தா் சிங் (பாரா வில்வித்தை), சரத் குமாா் (பாரா தடகளம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com