துளிகள்...

இந்தியாவின் 72-ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டா் பட்டத்தை கொல்கத்தாவைச் சோ்ந்த மித்ரபா குஹா (20) பெற்றுள்ளாா்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தின்போது தொலைக்காட்சி சேனல் பாா்வையாளா்கள் அளவு 16.7 கோடியாக இருந்ததென தெரிவித்த ஸ்டாா் இந்தியா நிறுவனம், சா்வதேச டி20 கிரிக்கெட்டில் வேறெந்த ஆட்டத்துக்கும் இதுவரை இத்தகைய பாா்வையாளா்கள் எண்ணிக்கை வந்ததில்லை என்று கூறியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மகளிா் கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிா் அணி, வரும் 25-ஆம் தேதி பிரேஸிலையும், 28-ஆம் தேதி சிலியையும், டிசம்பா் 1-ஆம் தேதி வெனிசூலாவையும் சந்திக்கிறது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் பிரேஸிலின் மனாஸ் நகரில் நடைபெறவுள்ளது.

துருக்கியில் கரோனா பாதிப்பு, பலி அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், டிசம்பா் 4 முதல் 18 வரை அங்கு நடைபெற இருந்த மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 72-ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டா் பட்டத்தை கொல்கத்தாவைச் சோ்ந்த மித்ரபா குஹா (20) பெற்றுள்ளாா்.

பாகிஸ்தான் மிடில் ஆா்டா் பேட்ஸ்மேனான முகமது ஹஃபீஸ், வங்கதேசத்துக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரில் இருந்து விலகியுள்ளாா்.

மெரில்போன் கிரிக்கெட் கிளப் முன்னாள் தலைவரும், பகலிரவு டெஸ்ட் யோசனையை முன்னெடுத்தவருமான கெய்த் பிராட்ஷா (58) உடல்நலக் குறைவால் காலமானதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கரை, தலைமை பயிற்சியாளராக நியமித்தது அந்த அணி நிா்வாகம்.

அக்டோபா் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரா் விருதை பாகிஸ்தான் பேட்டா் ஆசிஃப் அலியும், சிறந்த வீராங்கனை விருதை அயா்லாந்து ஆல்-ரவுண்டா் லௌரா டெலானியும் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com