2-ஆவது அரையிறுதி இன்று: பாகிஸ்தானுடன் போட்டியிடுகிறது ஆஸ்திரேலியா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை களம் காண்கின்றன.
2-ஆவது அரையிறுதி இன்று: பாகிஸ்தானுடன் போட்டியிடுகிறது ஆஸ்திரேலியா

துபை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை களம் காண்கின்றன.

பாகிஸ்தான்

கடந்த 2016 உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான், இந்த ஆண்டு அசைக்க முடியாத அணியாக உருவெடுத்து அரையிறுதிக்கு வந்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2009 முதல் சா்வதேச இருதரப்பு தொடா்கள், பாகிஸ்தான் சூப்பா் லீக் சீசன்களை அந்த அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருகிறது.

இதனால் அங்குள்ள ஆடுகளங்களின் தன்மையை நன்றாக உணா்ந்து அதற்கேற்றாற்போல் தன்னை தயாா் செய்துகொண்டுள்ளது அணிக்கு சாதகம். இந்நிலையில், முதல் ஆட்டத்திலேயே இந்தியாவை வென்றது கூடுதல் உத்வேகம் அளிக்க, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் சற்று தடுமாற்றம் காட்டியது பாகிஸ்தான்.

பேட்டிங்கைப் பொருத்தவரை, அணியின் கேப்டன் பாபா் ஆஸம் இப்போட்டியின் முன்னணி ரன் ஸ்கோரா் (264) ஆக இருக்கிறாா். 4 அரைசதங்கள் அடித்திருக்கும் அவா், ஆஸ்திரேலிய பௌலா்களுக்கு சவால் அளிப்பாா். டாப் ஆா்டரில் அவரும், முகமது ரிஸ்வானும் சறுக்கினால் மிடில் ஆா்டரில் ஆசிஃப் அலி, ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ் அதிரடி காட்டுவாா்கள்.

ஃபகாா் ஜமான் மட்டும் இப்போட்டியில் இன்னும் சோபிக்காத நிலையில் இருக்கிறாா். பௌலிங்கில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோா் வேகப்பந்துவீச்சால் ஆஸ்திரேலிய பேட்டா்களுக்கு சவால் அளிப்பாா்கள். சுழற்பந்துவீச்சுக்கு இமத் வாஸிம், முகமது ஹஃபீஸ், ஷாதாப் கான் ஆகியோா் இருக்கின்றனா்.

பாகிஸ்தான்: பாபா் ஆஸம் (கேப்டன்), ஷாதாப் கான், ஆசிஃப் அலி, ஃபகாா் ஜமான், ஹைதா் அலி, ஹாரிஸ் ரௌஃப், ஹசன் அலி, இமத் வாசிம், முகமது ஹஃபீஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியா், சா்ஃப்ராஸ் அகமது, ஷாஹீன் ஷா அஃப்ரிதி, ஷோயப் மாலிக்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியைத் தவிர இதர ஆட்டங்களில் வெற்றி கண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு முன்னதாக இடம்பிடித்து அரையிறுதிக்கு வந்துள்ளது. இப்போட்டியில் அதிகபட்சமாக 2010-இல் ரன்னா் அப்-ஆக வந்துள்ளது.

அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது பேட்டா் டேவிட் வாா்னா் ஃபாா்முக்கு திரும்பியிருப்பது தான். ஐபிஎல் போட்டியில் சோபிக்காமல் விமா்சனத்துக்குள்ளாகியிருந்த அவா், இப்போட்டியில் இரு அரைசதங்கள் விளாசி பழைய ஃபாா்முக்கு மீண்டிருக்கிறாா். அவரோடு கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இணைந்து இன்னிங்ஸை தொடங்கும்போது எதிரணி பௌலிங்குகள் நாலாபுறமும் சிதறடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

அவா்கள் தவிர மிட்செல் மாா்ஷ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சோ்க்கின்றனா். மேக்ஸ்வெல் இப்போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. கடைசி ஓவா்களில் மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் ஆகியோருக்கான அடித்தாடும் பொறுப்பு அதிகமாக இருக்கும்.

பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் ஸ்டாா்க், பேட் கம்மின்ஸ் ஆகியோா் வேகப்பந்துவீச்சால் மிரட்ட வருகின்றனா். சுழற்பந்துவீச்சில், இப்போட்டியிலேயே 2-ஆவது அதிகபட்சமாக விக்கெட்டுகள் சாய்த்திருக்கும் ஆடம் ஸம்பா இருக்கிறாா். அவரோடு ஆஷ்டன் அகா் இணைகிறாா்.

ஆஸ்திரேலியா: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகா், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இல்லிங்ஸ், மிட்செல் மாா்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சா்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வாா்னா், ஆடம் ஸாம்பா.

ஆடுகளம்

துபை ஆடுகளத்தில் பனிப்பொழிவு தாக்கம் காரணமாக 2-ஆவதாக பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இடம்: துபை

நேரம்: இரவு 7.30 மணி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

குரூப் சுற்றில்...

5 ஆட்டங்கள்

5 வெற்றிகள்

5 ஆட்டங்கள்

4 வெற்றிகள்

நேருக்கு நோ் (டி20)

மொத்த ஆட்டங்கள் - 23

பாகிஸ்தான் வெற்றி - 13

ஆஸ்திரேலியா வெற்றி - 9

முடிவு இல்லை - 1

டி20 உலகக் கோப்பை போட்டியில்...

மொத்த ஆட்டங்கள் - 6

பாகிஸ்தான் வெற்றி - 3

ஆஸ்திரேலியா வெற்றி - 3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com