காமன்வெல்த் போட்டிகள் 2022: இந்திய மகளிர் அணியின் ஆட்டங்கள் அறிவிப்பு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடும் ஆட்டங்களின் அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்திய வீராங்கனை மந்தனா
இந்திய வீராங்கனை மந்தனா

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடும் ஆட்டங்களின் அட்டவணை வெளியாகியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அடுத்ததாக 2022-ல் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

20 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் 50 ஓவர் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது. தென் ஆப்பிரிக்கா தங்கமும் ஆஸ்திரேலியா வெள்ளியும் பெற்றன. 

2022 பிர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் 8 நாள்களுக்கு மகளிர் கிரிக்கெட் டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி மூன்று ஆட்டங்களில் பங்கேற்கிறது. அரையிறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 6 அன்றும் இறுதி ஆட்டம் ஆகஸ்ட் 7 அன்றும் நடைபெறுகின்றன. அரையிறுதியில் தோற்கும் அணிகள் 3-ம் இடத்துக்கான போட்டியில் பங்கேற்கின்றன. 

இந்திய மகளிர் அணி தொடக்க நாளன்று (ஜூலை 29) ஆஸ்திரேலியாவையும் ஜூலை 31  அன்று பாகிஸ்தானையும் ஆகஸ்ட் 3 அன்று பார்படாஸையும் எதிர்கொள்கிறது. 

காமன்வெல்த் போட்டிகள்: இந்திய மகளிர் அணியின் ஆட்டங்கள்

vs ஆஸ்திரேலியா, ஜூலை 29
vs பாகிஸ்தான், ஜூலை 31
vs பார்படாஸ், ஆகஸ்ட் 3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com