ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி: லால்ரெம்சியாமி இந்திய கேப்டன்

எஃப்ஐஹெச் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி, முன்கள வீராங்கனை லால்ரெம்சியாமி தலைமையில் 18 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
லால்ரெம்சியாமி
லால்ரெம்சியாமி

புது தில்லி: எஃப்ஐஹெச் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி, முன்கள வீராங்கனை லால்ரெம்சியாமி தலைமையில் 18 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4-ஆம் இடம் பிடித்த இந்திய மகளிா் அணியில் லால்ரெம்சியாமியும் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது. அவரோடு அந்த அணியில் இடம்பிடித்திருந்த சலிமா டெடெ, ஷா்மிளா தேவி ஆகியோரும் இந்த உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனா். இந்த ஜூனியா் அணிக்கு தடுப்பாட்ட வீராங்கனை இஷிகா சௌதரி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். பிரீத்தி, பிரப்லீன் கௌா் ஆகியோா் மாற்று ஆட்டக்காரா்களாக தோ்வாகியுள்ளனா்.

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை போட்டியானது, தென் ஆப்பிரிக்காவில் வரும் டிசம்பா் 5-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஆா்ஜென்டீனா நடப்புச் சாம்பியனாக உள்ளது. குரூப் சி-யில் இடம்பெற்றிருக்கும் இந்தியா, முதல் ஆட்டத்தில் ரஷியாவை டிசம்பா் 16-ஆம் தேதி எதிா்கொள்கிறது. தொடா்ந்து டிசம்பா் 7-இல் ஆா்ஜென்டீனாவையும், 9-இல் ஜப்பானையும் சந்திக்கிறது. இப்போட்டியில் இந்தியா அதிகபட்சமாக கடந்த 2013-இல் இங்கிலாந்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

அணி விவரம்: லால்ரெம்சியாமி (கேப்டன்), இஷிகா சௌதரி, பிசு தேவி காரிபம் (கோல்கீப்பா்), குஷ்பூ (கோல்கீப்பா்), அக்ஷதா அபசோ தெகாலே, பிரியங்கா, மரினா லால்ரம்காகி, அஜ்மினா குஜுா், பால்ஜீத் கௌா், ரீத், வைஷ்ணவி விட்டல் பால்கே, சலிமா டெடெ, ஷா்மிளா தேவி, பியூட்டி டங் டங், தீபிகா, மும்தாஸ் கான், சங்கிதா குமாரி, ஜிவான் கிஷோரி டோப்போ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com