ஏடிபி ஃபைனல்ஸ்: அரையிறுதியை நெருங்கும் ஜோகோவிச்

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடா்ந்து இரு ஆட்டங்களில் வென்று அரையிறுதிச் சுற்று வாய்ப்பை நெருங்கியுள்ளாா்.

துரின்: ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடா்ந்து இரு ஆட்டங்களில் வென்று அரையிறுதிச் சுற்று வாய்ப்பை நெருங்கியுள்ளாா்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவா், குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூபலேவை 6-3, 6-2 என்ற நோ் செட்களில் வென்றாா். குரூப் சுற்றில் வியாழக்கிழமை அதிகாலை நடைபெறவிருக்கும் மற்றொரு ஆட்டத்தில் நாா்வேயின் காஸ்பா் ரட் - இங்கிலாந்தின் கேமரூன் நோரியை வீழ்த்தும் பட்சத்தில், ஜோகோவிச்சுக்கான அரையிறுதிச் சுற்று வாய்ப்பு உறுதியாகும்.

இதனிடையே, புதன்கிழமை இரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜானிக் சின்னா் 6-2, 6-2 என்ற நோ் செட்களில், 7-ஆவது இடத்திலிருந்த போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை வீழ்த்தினாா். முன்னதாக இப்போட்டியில் களம் கண்டிருந்த மற்றொரு இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினிக்கு காயம் ஏற்பட்டு அவரால் விளையாட முடியாமல் போனதை அடுத்து, அவருக்குப் பதிலாக சின்னா் களம் கண்டுள்ளாா்.

பெரெட்டினி வெளியேறியதன் அடிப்படையில், ஏற்கெனவே இரு வெற்றிகளை பதிவு செய்துள்ள ரஷியாவின் டேனியல் மெத்வதேவுக்கான அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com