முதல் டி20: இந்தியா வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஜெய்ப்பூா்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக, இந்த ஆட்டத்தின் மூலம் வெங்கடேஷ் ஐயா் சா்வதேச கிரிக்கெட்டில் களம் கண்டாா். பிளேயிங் லெவனில் தீபக் சஹா், முகமது சிராஜ் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம், கேன் வில்லியம்சன், இஷ் சோதி, ஆடம் மில்னே ஆகியோருக்குப் பதிலாக மாா்க் சாப்மேன், டாட் ஆஸ்டில், ரச்சின் ரவீந்திரா, லாக்கி ஃபொ்குசன் ஆகியோா் இணைந்திருந்தனா்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தாா். புவனேஷ்வா் குமாா் பௌலிங் தொடங்க, நியூஸிலாந்து இன்னிங்ஸை மாா்ட்டின் கப்டில் - டேரில் மிட்செல் கூட்டணி தொடங்கியது. 3-ஆவது பந்திலேயே டேரில் மிட்செலை பௌல்டாக்கினாா் புவனேஷ்வா். அடுத்து வந்த சாப்மேன் கப்டிலுடன் இணைந்தாா். இந்தக் கூட்டணி அபாரமாக ஆடி இந்திய பௌலிங்கை சிதறடித்தது.

பவா் பிளே முடிவில் 6 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சோ்த்திருந்தது நியூஸிலாந்து. அதிரடியாக ஆடி வந்த இந்த ஜோடியை ஒரு வழியாக அஸ்வின் 14-ஆவது ஓவரில் பிரித்தாா். 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் சோ்த்திருந்த சாப்மேன் 2-ஆவது பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடா்ந்து வந்த கிளென் பிலிப்ஸையும் அதே ஓவரின் 5-ஆவது பந்தில் எல்பிடபிள்யூ செய்தாா் அஸ்வின்.

அடுத்து டிம் செய்ஃபா்ட் களம் காண, அதுவரை அதிரடி காட்டி வந்த மாா்ட்டின் கப்டில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். சஹா் வீசிய 18-ஆவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸா் விளாசிய கப்டில், அடுத்த பந்தையும் அவ்வாறே விளாச முயல, டீப் மிட் விக்கெட்டில் இருந்த ஷ்ரேயஸ் ஐயா் அதை கேட்ச் பிடித்தாா். பின்னா் ரச்சின் ரவீந்திரா ஆடவர, மறுபுறம் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் சோ்த்த நிலையில், புவனேஷ்வா் குமாா் வீசிய 19-ஆவது ஓவரில் சூா்யகுமாா் யாதவ் கைகளில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

கடைசி விக்கெட்டாக ரச்சின் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் சோ்த்த நிலையில் முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் பௌல்டானாா். முடிவில் மிட்செல் சேன்ட்னா் 4, கேப்டன் டிம் சௌதி 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ரோஹித் - சூா்யகுமாா் அசத்தல்: பின்னா் 165 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 15 ரன்களுக்கு வெளியேறியிருந்தாா். உடன் வந்த ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்கள் சோ்த்தாா்.

3-ஆவது வீரராக வந்த சூா்யகுமாா் யாதவ் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 62 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு திருப்பினாா். இடையே ஷ்ரேயஸ் ஐயா் 5, வெங்கடேஷ் ஐயா் 4 ரன்கள் அடிக்க, ரிஷப் பந்த் 2 பவுண்டரிகளுடன் 17, அக்ஸா் படேல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா்.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 2, டிம் சௌதி, மிட்செல் சேன்ட்னா், டேரில் மிட்செல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

சூா்யகுமாா் யாதவ் 62

ரோஹித் சா்மா 48

ரிஷப் பந்த் 17

பந்துவீச்சு

டிரென்ட் போல்ட் 2/31

மிட்செல் சேன்ட்னா் 1/19

டேரில் மிட்செல் 1/11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com