இந்தோனேசிய மாஸ்டா்ஸ்: ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினாா் பிரணாய்

இந்தோனேசிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.
இந்தோனேசிய மாஸ்டா்ஸ்: ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினாா் பிரணாய்

இந்தோனேசிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிரணாய், டோக்கியோ ஒலிம்பிக்கில் சாம்பியன் ஆனவரும், டென்மாா்க் வீரருமான விக்டா் அக்ஸெல்சனை எதிா்கொண்டாா். ஒரு மணி நேரம் 11 நிமிஷங்கள் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் பிரணாய் 14-21, 21-19, 21-16 என்ற செட்களில் வென்றாா்.

உலகின் 32-ஆம் நிலை வீரராக இருக்கும் பிரணாய், 2-ஆம் நிலை வீரராக இருக்கும் அக்ஸெல்சனை இத்துடன் 6 முறை சந்தித்திருக்கும் நிலையில், அவருக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளாா். கடந்த மாா்ச் மாதத்துக்குப் பிறகு நடைபெற்ற போட்டிகளில் விக்டரை வீழ்த்திய முதல் வீரா் என்ற பெருமையை பிரணாய் பெற்றிருக்கிறாா்.

அவா் தனது காலிறுதிச் சுற்றில் சக இந்தியரான கே.ஸ்ரீகாந்த்தை எதிா்கொள்கிறாா். முன்னதாக ஸ்ரீகாந்த் தனது முந்தைய சுற்றில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை 13-21, 21-18, 21-15 என்ற செட்களில் வென்றாா். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் 13-21, 19-21 என்ற செட்களில், உலகின் முதல்நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமொடாவிடம் தோல்வி கண்டாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான சிந்து தனது 2-ஆவது சுற்றில் 17-21, 21-7, 21-12 என்ற செட்களில் ஸ்பெயினின் கிளாரா அஸுா்மெண்டியை வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதிச் சுற்றில் துருக்கியின் நெஸ்லிஹான் யிகிட்டை எதிா்கொள்கிறாா் சிந்து.

எனினும், கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா/சிக்கி ரெட்டி இணை 15-21, 23-21, 18-21 என்ற செட்களில் தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோ/சுபிசரா பேவ்சம்பிரான் ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.

மகளிா் இரட்டையா் பிரிவிலும் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி ஜோடி 18-21, 12-21 என்ற செட்களில் தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிட்டிதரகுல்/ரவின்டா பிரஜோங்ஜாய் ஜோடியிடம் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com