ஆஸி. டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெயின் திடீா் விலகல்

சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல்கள் அனுப்பிய புகாா் தொடா்பாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெயின் வெள்ளிக்கிழமை பதவி விலகினாா்.

சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல்கள் அனுப்பிய புகாா் தொடா்பாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெயின் வெள்ளிக்கிழமை பதவி விலகினாா்.

ஆஸி. அணியின் டெஸ்ட் கேப்டனாக இருப்பவா் டிம் பெயின். வரும் டிசம்பா் 8-ஆம் தேதி பொ்த்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடா் முதல் ஆட்டத்தில் டிம் பெயின் தலைமையிலான ஆஸி. அணி பங்கேற்கிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு டாஸ்மேனிய கிரிக்கெட் சங்கத்தில் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியிலான தகவல்களை அனுப்பினாா் என டிம் பெயின் மீது புகாா் எழுந்தது. இதுதொடா்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணையும் மேற்கொண்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து தான் விலகுவதாக டிம் பெயின் அறிவித்தாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

இந்த முடிவு கடினமானது தான். ஆனால் எனக்கும், குடும்பத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் சரியான முடிவு என்றாா்.

கடந்த 2018-இல் கிரிக்கெட் பந்தை உப்பு காகிதம் கொண்டு சேதப்படுத்திய புகாரில் ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், டிம் பெயின் கேப்டனாக நியமிக்கப்பட்டு அணி விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வந்தாா். புதிய கேப்டனை அடையாளம் காணும் பணியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com