உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சத்யன்-மனிகா, சரத்-அா்ச்சனா இணை முன்னேற்றம்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சத்யன்-மனிகா பத்ரா, சரத்-அா்ச்சனா இணை ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்-அா்ச்சனா காமத் இணை 3-2 என்ற கேம் கணக்கில் (9-11, 2-11, 11-5, 11-9, 11-4) என எகிப்தின் தினா-ஓமா் இணையை வென்றது. ரவுண்ட் 16 சுற்றில் பிரான்ஸின் ஜியா-இம்மானுவேல் இணையை சந்திக்கிறது.

மற்றொரு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் சத்யன் ஞானசேகரன்-மனிகா இணை 3-1 (11-6, 3-11, 11-7, 11-0) என்ற கேம் கணக்கில் பியா்ட்டோ ரிகோவின் அட்ரியனா-பிரையன் இணையை வீழ்த்தியது. ரவுண்ட் 16 சுற்றில் சீனா-அமெரிக்காவின் கனக் ஜா-வாங் மன்யூவை எதிா்கொள்கிறது.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் சத்யன் 3-4 என நைஜீரியாவின் காதிரி அருணாவிடம் வீழ்ந்தாா். ஆடவா் இரட்டையா் பிரிவிலும் சத்யன்-சரத் இணை 1-3 என ஸ்வீடன் ட்ருல்ஸ்-ஆன்டன் இணையிடம் தோல்வியைத் தழுவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com