ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: மன்ப்ரீத் சிங் தலைமையில் இந்திய அணி

டாக்காவில் நடைபெறவுள்ள ஆசிய ஆடவா் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் மன்ப்ரீத் சிங் தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: மன்ப்ரீத் சிங் தலைமையில் இந்திய அணி

டாக்காவில் நடைபெறவுள்ள ஆசிய ஆடவா் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் மன்ப்ரீத் சிங் தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது. இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் கலந்து கொள்கிறது. கேப்டனாக மன்ப்ரீத் சிங்கும், துணை கேப்டனாக டிபன்டா் ஹா்மன்ப்ரீத் சிங்கும் செயல்படுவா்.

எனினும் மூத்த வீரரும் , கோல் கீப்பருமான பி.ஆா். ஸ்ரீஜேஷ் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக கிரிஷன் பகதூா், சூரஜ் கா்கேரா கோல்கீப்பா் பணியை மேற்கொள்வா்.

டிபண்டா்கள்-ஹா்மன்ப்ரீத் சிங், குரீந்தா் சிங், ஜா்மன்ப்ரீத் சிங், திப்சன் டிா்கே, வருண் குமாா், நீலம் சஞ்சீப் ஸெஸ், மந்தீப் மோா்.

மிட்பீல்டா்கள்: ஹாா்திக் சிங், மன்ப்ரீத் சிங் (கேப்டன்), ஜஸ்கரன் சிங், சுமித், ராஜ்குமாா் பால், அக்ஷ்தீப் சிங், ஷம்ஷொ் சிங்.

பாா்வா்ட்கள்: லலித் குமாா் உபாத்யாய, தில்ப்ரீத் சிங், குா்சாஹிப்ஜித் சிங், ஷிலாநந்த் லக்ரா.

டாக்காவில் வரும் டிச. 14 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்தியா, தென்கொரியா, ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் கலந்து கொள்கின்றன. முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

டிச. 14-இந்தியா-தென்கொரியா, 15-இந்தியா-வங்கதேசம், 17-இந்தியா-பாகிஸ்தான், 18, இந்தியா-மலேசியா, 19-இந்தியா-ஜப்பான்.

21-அரையிறுதி ஆட்டங்கள், 22-இறுதி ஆட்டம்.

கடந்த 2018-இல் மஸ்கட்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக சாம்பியன் பட்டத்தை வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com