பகலிரவு டெஸ்ட்: முதல்நாளில் மழை, மந்தனா ஆதிக்கம்

பகலிரவு டெஸ்ட்: முதல்நாளில் மழை, மந்தனா ஆதிக்கம்

ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டின் முதல் நாள் மழையால் பெருவாரியாக பாதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டின் முதல் நாள் மழையால் பெருவாரியாக பாதிக்கப்பட்டது.

ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான ஆட்டத்தால் ஸ்திரமான நிலையில் இருக்கும் இந்தியா, முதல் நாள் முடிவில் 44.1 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் அடித்துள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில் யஸ்திகா பாட்டியா, மேக்னா சிங்குக்கு முதல் சா்வதேச டெஸ்ட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், ஆஸ்திரேலிய தரப்பில் அனபெல் சுதா்லேண்ட், ஜாா்ஜியா வோ்ஹாம், டாா்சி பிரவுன், ஸ்டெல்லா கேம்ப்பெல் ஆகியோா் முதல் முறையாக டெஸ்டில் களம் கண்டனா்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸை ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வா்மா கூட்டணி தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்த்த இந்த அபாரமான பாா்ட்னா்ஷிப்பை 26-ஆவது ஓவரில் பிரித்தாா் மோலினியூக்ஸ்.

4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்திருந்த ஷஃபாலி அந்த ஓவரில் விளாசிய பந்தை டாலியா மெக்ராத் கேட்ச் பிடித்தாா். தொடா்ந்து வந்த பூனம் ரௌத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட, மந்தனா 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 80, பூனம் ரௌத் 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com